மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு
மூலக்கூற்று உயிரியலின் மையகோட்பாடு (Central dogma of molecular biology) என்பது மூலக்கூறு உயிரியலில் பிரிக்க முடியாத நிகழ்வு. முதலில் இதை வழிமொழிந்தவர் பிரான்சிஸ் கிரிக் என்ற ஆய்வாளர், டி.என்.ஏ (மரபு இழை) ஒரு ஈரிழை என உறுதிப்படுத்தியவர். மரபு இழையில் இருந்து மரபு செய்திகள் கடத்தபடுவதை விரிவாக விளக்கும் கோட்பாடாகும்.
பொருளடக்கம் |
[தொகு] மரபு இழை படியெடுத்தல் (DNA Replication)
மரபு இழையில் இருந்து மரபு இழையாக மாறுதல். இதற்க்கு பல கோட்பாடுகள் இருந்தாலும் அரை -பழைமை (semi-conservative) முறை நிருபிக்கப்பட்டு பலராலும் ஏற்றுகொள்ளப்பட்ட முறையாகும்.
[தொகு] ஈரிழை மாறுதல் (Transcription)
மரபு இழையில் இருந்து ரிபோநிவ்க்ளிக் அமிலம் (ஆர். என் .எ) மாக (ஓரிழை) நகலாக மாற்றபடும். இம்மாற்றத்தின் போது மரபு ஈரிழையின் (டி.என்.எ ) 5' (முனை அல்லது தொடர்) ப்ரீம் இருந்து 3' (முனை அல்லது தொடர்) ப்ரீம் இழையின் பகுதியில்லிருந்து ரிபோநிவ்க்ளிக் அமிலம் நகலாக்கப்படும். இவ்வினையின் பொழுது ஆர்.என்.எ பாலிமெரசு ௨ (II) என்ற நொதி செய்தி (messenger) எம்.ஆர்.என்.எ மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. மேலும் சிறிய (snRNA), குறிய (microRNAs) ஆர்.என்.எ. உற்பத்தி செய்வதற்கு பயன்படுகிறது, இவையிரண்டும் ( சிறிய (snRNA), குறிய (microRNAs) ஆர்.என்.எ.) வளர்ச்சி நிலைகளில் (developmental regulation) ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக குறிய ஆர்.என்.எ பற்றி தற்பொழுது மிகையான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஏனெனில் குறிய ஆர்.என்.எ வில் சிறு அளவில் மாற்றம் ஏற்பட்டால் பல இடர்களை ஏற்படுத்துகின்றன.
[தொகு] புரத உற்பத்தி (Translation)
செய்தி ஆர்.என்.எ வில் இருந்து (mRNA) புரதமாக மாற்றப்படுதல். இவ்நிகழ்வின்போது செய்தி ஆர்.என்.எ வில் மும்கோடு (triplet codon) எதிரகாக டி.ஆர்.என்.எ வில் (tRNA)களை இருந்து வரும் எதிர்க்கோடு களை (anticodon) பயன்படுத்தி அமினோஅமிலம் படிபடியகாக சேர்க்கப்பட்டு பல-இணைவுகளாக (poly-pepetide) மாற்றப்பட்டு முழு புரதமாக உருவாக்கப்படும். குறிபிட்ட அமினோஅமிலத்திர்க்கு தனியான மும்கோடுகளும் (ஒரே அமினோஅமிலம் மூன்று அல்லது நான்கு மும்கோடுகள் இருக்கும்), அதற்குரிய எதிர்கோடுகளும் அமைய பெற்றுள்ளன. டி அமினோ அசைல் சிந்தடேசு (t-aminoaceyl sunthatase ) என்ற நொதியும் மற்றும் பல காரணிகளும் (initiation, elongation factors) முக்கிய பங்காற்றுகிறது.
[தொகு] பின்மாற்றம் (reverse transcription)
பல ஆண்டுகளாக மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் மாற்றமுடியாது எனவும், ஒருமுறை டி.என்.எ. ஆர்.என்.எ வாக மாற்றப்பட்டால் அவை பின்னோக்கி செல்ல முடியாது என நம்பப்பட்டது. பிற்காலத்தில் வைரஸ்கள் (RNA viruses) ரிவர்சு டிரன்க்ரிப்டசு நொதியால் ஆர்.என்.எ வில் இருந்து டி.என்.எ வுக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வு ரெட்ரோ வைரஸ் மற்றும் பார ரெட்ரோ விருஸ்கலில் நடைபெறுகின்றன. இக்கண்டுபிடுப்புகள் மூலக்கூறு உயிர்யலில் ஒரு புரட்சி ஏற்படுத்தின.
[தொகு] பிரியன்ஸ் (prions)
இவைகள் ஒரு புரதம். புரத அமைப்புகளில் (secondary structure and protein folding) ஏற்படும் மாற்றங்களினால் நோயைத் தூண்டுகின்றன. ஆய்வாளர் ஸ்டான்லி புருசினர் (Stanley B. Prusiner ) பல ஆய்வு கட்டுரைகளையும், அதற்க்கான நோபல் பொற்கிழியும் பெற்றார்.