நாட்சி ஜெர்மனி
நாட்சி ஜேர்மனி (Nazi Germany) என்பது, தேசிய சோசலிச ஜேர்மனிய தொழிலாளர் கட்சி (National Sozialisten) யின் கீழ் இருந்த ஜேர்மனியைக் குறிக்கப் பயன்படுகின்றது. 1933 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டுவரை இக் கட்சியினர் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர். ஆயினும் இதற்கு முந்திய வைமர் குடியரசு காலத்தில் இருந்தது போலவே நாடு ஜேர்மன் றைஃக் (Deutsches Reich - டொய்ச்ற்செ றைஃக்) எனவே அழைக்கப்பட்டு வந்தது. 1943 ஆம் ஆண்டில் இப்பெயர் மாற்றப்பட்டு நாடு பெரிய ஜேர்மனிய இராச்சியம் (Großdeutsches Reich - க்குறோஸ் டொய்ற்ச்ஷெஸ் றைஹ்) என அழைக்கப்பட்டது.
இந் நாடு 1930களிலிருந்து 1940களின் நடுப்பகுதிவரை உலகின் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கியது. இதன் நாடு விரிவாக்கக் கொள்கை காரணமாக ஐரோப்பா முழுவதும் பதட்டம் நிலவியது. இது இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டதுடன், ஐரோப்பாவின் நாடுகள் பலவற்றையும் ஆக்கிரமித்து இருந்தது. இக்காலத்தில் இந்நாடு, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ஜேர்மன் தேர்தல், 1933
- ↑ Statistisches Bundesamt (Federal Statistical Office), Statistisches Jahrbuch 2006 für die Bundesrepublik Deutschland, p. 34.
- ↑ Germany — Country Study