மூணார்
| மூனாறு | |
| — நகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | • இடுக்கி |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மக்கள் தொகை • பெருநகர் |
• 68,205 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
557 கிமீ2 (215 சதுர மைல்) • 1,450 மீட்டர்கள்s (4 அடி) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | tourism idukki.nic.in tourism |
மூனாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில் ஆகும். முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. ஊட்டி, கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூனாறு . இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே.
சுற்றுலா [தொகு]
ஜான் முன்றே டேவிட் என்ற , ஆங்கிலேயர் முதன் முதலில்,இங்கே வந்தார். அவர் பெயரில் உள்ள முன்றே என்பதே மருவி பின் நாளில் மூனாறு என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூனாறு எனப் பெயர் பெற்றது.தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூனாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. ராஜமலைத் தொடரில்தான் அழிந்துவரும் விலங்கினமான வரை ஆடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளன. மூனாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது. இதன் சுற்றுவட்டத்தில் மாட்டுப்பட்டி அணை உள்ளது.
மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாற்றிற்கு மதுரையில் இருந்தும், திருச்சூரில் இருந்தும் பேருந்தின் வாயிலாக செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து போடிநாயக்கனூர் என்ற ஒரு மழைமறைவு நகரிலிருந்து 2 மணித்தியாலத்தில் சிற்றுந்தில் செல்லக்கூடிய வசதி படைத்தது.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது
இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.
மேற்கோள்கள் [தொகு]
புற இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் munnar தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |