மு. அப்துல் லத்தீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. அப்துல் லத்தீப் (பிறப்பு: பெப்ரவரி 5, 1937) மலேசியத்தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். மண்ணின் மைந்தன், தோழன் மு.அ. என்பவை இவரது புனைப்பெயர்கள். இவர் தனது எழுத்துலகப் பிரவேசத்தை 1950 இல் தொடங்கினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவருடைய தந்தையார் எம்.எஸ். முகம்மது ஷேக், தாயார் பெயர் பல்கீஸ். இவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உள்ளனர். இவர் தனது பள்ளிப்படிப்பைத் தமிழகத்திலும், மலாயாவிலுமாகத் தொடர்ந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் கல்வி பயின்றார்.

எழுத்துலக வாழ்வு[தொகு]

1953 இலிருந்து மலைநாடு, தேச தூதன், தினமணி, ஆகிய நாளேடுகளில் செய்தி ஆசிரியராகவும் தமிழ் மலர் நாளேட்டின் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். மலேசிய வானொலி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இவரது முதல் படைப்பு தமிழ் முரசு நாளிதழில் 1956 இல் இடம் பெற்றது. இதுவரை 100 சிறுகதைகளையும், 100 கட்டுரைகளையும், 30 வானொலி நாடகங்களையும் படைத்துள்ளார். நாட்டில் முதன் முதலில் வெளிவந்த "மாணவர் பூங்கா" என்ற மாணவர் திங்கள் இதழை 1956 இல் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்து வழி நடத்தினார். சிறந்த சிறுகதைகளையும், சர்ச்சைக்கும் சிந்தனைக்கும் உரிய கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

இவரது சேவையைப்பாராட்டி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தங்கப் பதக்கமும் பணிமுடிப்பும் நற்சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது. மலேசியத்தமிழ் இலக்கியப் படைப்பாளர் சங்கத்தின் டத்தோ பத்மநாபன் இலக்கிய விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • மனித தெய்வம் (கதைக் கொத்து)
  • சிறுகதைக் களஞ்சியம் (சிறுகதைத் தொகுப்பு)
  • பூவுலகில் புகழடைந்தோர் (கட்டுரை நூல்)
  • மணிச்சரம் (கட்டுரை நூல்)
  • எண்ண ரதங்கள் (கட்டுரை நூல்)
  • சில நிமிடங்களில் சில சிந்தனைகள் (கட்டுரை நூல்)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அப்துல்_லத்தீப்&oldid=3224962" இலிருந்து மீள்விக்கப்பட்டது