முற்றுகை (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chess zhor 26.png
Chess zver 26.png
a8 b8 c8 d8 e8 f8 g8 h8
a7 b7 c7 d7 e7 f7 g7 h7
a6 b6 c6 d6 e6 f6 g6 h6
a5 b5 c5 d5 e5 f5 g5 h5
a4 b4 c4 d4 e4 f4 g4 h4
a3 b3 c3 d3 e3 f3 g3 h3
a2 b2 c2 d2 e2 f2 g2 h2
a1 b1 c1 d1 e1 f1 g1 h1
Chess zver 26.png
Chess zhor 26.png
வெள்ளைக் கோட்டையால் கறுப்பு அரசன் முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

முற்றுகை (Check) என்பது சதுரங்கம், சீனச் சதுரங்கம், சப்பானியச் சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் அடுத்த நகர்வில் அரசனைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலைக் குறிக்கும்.[1] ஒரு போட்டியாளரின் அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டால், அவர் அடுத்த நகர்வில் அரசனை முற்றுகையில் இருந்து விடுவிக்க வேண்டும் (சாத்தியமானால்). அதாவது, இன்னொரு காயின் மூலம் அச்சுறுத்தலைத் தடுக்கவோ அரசனை எதிரியால் தாக்கப்படாத கட்டங்களுக்கு நகர்த்தவோ முற்றுகைக்காளாக்குகின்ற காயைக் கைப்பற்றவோ வேண்டும்.[2] அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவ்வரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டுப் போட்டியாளர் தோல்வியை எதிர்கொள்வார்.[3]

சதுரங்கம் விளையாடும்போது முற்றுகை என்று கூறுவது போட்டியாளரின் விருப்பத்தைப் பொறுத்தது.[4]

அறிமுகம்[தொகு]

முற்றுகை என்பது எதிரியின் அரசனை அடுத்த நகர்வில் கைப்பற்றலாம் என்ற நிலைக்குக் கொண்டு வருதல் ஆகும்.[5] சதுரங்கத்தில் ஒரு காய் மூலமும் இரண்டு காய்கள் மூலமும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். ஆனால், சில சதுரங்க வகைகளில் இரண்டுக்கு மேற்பட்ட காய்களாலும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். அரசன் முற்றுகைக்காளாக்கப்பட்டு, அரசனை முற்றுகையிலிருந்து விடுவிப்பதற்கு எந்தவோர் ஏற்றுக் கொள்ளப்பட்ட நகர்வும் இல்லாதவிடத்து, அந்நிலைமை இறுதி முற்றுகை என அழைக்கப்படும்.[6] மேலும் அவ்வரசனைக் கொண்டிருக்கும் போட்டியாளர் தோல்வியுறுவார். இறுதி முற்றுகைக்கு ஆளாக்கிய போட்டியாளர் வெற்றியடைவார்.

தனது சொந்த அரசனை முற்றுகைக்காளாக்கக்கூடிய கட்டத்தில் வைப்பது சதுரங்க விதிமுறைகளுக்கு எதிரானது.[7] அவ்வாறான நகர்வு தவறானதாகக் கருதப்பட்டுப் பின்வாங்கப்படும். ஓர் அரசன் இன்னொரு அரசனை முற்றுகைக்காளாக்க முடியாது.[8] ஏனெனில், இது முதலாவது அரசனை முற்றுகைக்காளாக்கி விடும் (ஏனைய அனைத்துக் காய்களும் அரசனை முற்றுகைக்காளாக்க முடியும்.).

முற்றுகையிலிருந்து விடுவித்தல்[தொகு]

Chess zhor 26.png
Chess zver 26.png
a8 b8 c8 d8 e8 f8 g8 h8
a7 b7 c7 d7 e7 f7 g7 h7
a6 b6 c6 d6 e6 f6 g6 h6
a5 b5 c5 d5 e5 f5 g5 h5
a4 b4 c4 d4 e4 f4 g4 h4
a3 b3 c3 d3 e3 f3 g3 h3
a2 b2 c2 d2 e2 f2 g2 h2
a1 b1 c1 d1 e1 f1 g1 h1
Chess zver 26.png
Chess zhor 26.png
வெள்ளை முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது. வெள்ளையானது மூன்று வழிகளிலும் முற்றுகையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

ஒற்றை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிப்பதற்கு மூன்று சாத்தியமான வழிகள் உள்ளன.

 • முற்றுகைக்காளாக்குகின்ற காயை அரசனாலோ ஏனைய காய்களாலோ கைப்பற்றுவதால் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியும். முற்றுகைக்காளாக்கும் காய் அரசனுக்கு அடுத்துள்ள கட்டங்களிலிருந்தால் அக்காயைக் கைப்பற்றுவது அரசனை இன்னொரு முற்றுகைக்காளாக்காதவிடத்து மட்டும் (அதாவது, அக்காய்ககு இன்னொரு காய் பாதுகாப்புக் கொடுக்காதவிடத்து) அரசனின் மூலம் அக்காயைக் கைப்பற்ற முடியும்.
 • அரசனை அடுத்துள்ள கட்டங்களுக்கு நகர்த்துவதன் மூலமும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியம். ஆனால், அரசன் நகர்த்தப்படுகின்ற கட்டம், அரசனை இன்னொரு முற்றுகைக்கு இட்டுச் செல்லக்கூடாது. மேலும் முற்றுகையிலிருக்கும்போது அரசன் கோட்டை கட்ட முடியாது. முற்றுகைக்குள்ளாக்குகின்ற காய் எதிரியின் காயினால் பாதுகாக்கப்படாமலும் அரசனுக்கு அடுத்துள்ள கட்டங்களிலும் இருந்தால் அக்காயை அரசன் கைப்பற்றவும் முடியும்.
 • முற்றுகையைத் தடுப்பதன் மூலமும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியும். முற்றுகைக்காளாக்குகின்ற காயானது அரசியாகவோ கோட்டையாகவோ அமைச்சராகவோ இருந்து, முற்றுகைக்காளாக்குகின்ற காய்க்கும் அரசனுக்கும் இடையில் ஒரு கட்டமாயினும் இடைவெளி இருந்தால் மாத்திரமே இவ்வாறு தடுக்க முடியும். முற்றுகைக்காளாக்கப்பட்ட அரசனின் படையிலிருந்து ஒரு காயை முற்றுகைக்காளாக்கும் காய்க்கும் அரசனுக்கும் இடையில் நகர்த்துவதன் மூலமே இவ்வாறு தடுக்கலாம்.[9] இவ்வாறு தடுப்பதால் தடுக்கின்ற காய் பிணையை நீக்கும் வரை பிணைக்காளாக்கப்படும்.

வலப்பக்கத்திலுள்ள படத்திலே, வெள்ளையானது மூன்று வழிகளின் மூலமும் முற்றுகையிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.

 1. Nxa2 என்ற நகர்வை மேற்கொள்வதனூடாக முற்றுகைக்காளாக்குங்காயைக் கைப்பற்றுதல்
 2. அரசனைத் தாக்குதலில்லாத கட்டத்துக்கு (Kd6, Ke5, Ke7 என்பவற்றுள் ஏதேனும் ஒரு நகர்வு) நகர்த்துதல்
 3. Rc4 அல்லது Nd5இன் மூலம் முற்றுகையைத் தடுத்தல்


Chess zhor 26.png
Chess zver 26.png
a8 b8 c8 d8 e8 f8 g8 h8
a7 b7 c7 d7 e7 f7 g7 h7
a6 b6 c6 d6 e6 f6 g6 h6
a5 b5 c5 d5 e5 f5 g5 h5
a4 b4 c4 d4 e4 f4 g4 h4
a3 b3 c3 d3 e3 f3 g3 h3
a2 b2 c2 d2 e2 f2 g2 h2
a1 b1 c1 d1 e1 f1 g1 h1
Chess zver 26.png
Chess zhor 26.png
வெள்ளை இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டது. வெள்ளையின் அரசன் எங்கேயும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆகவே, வெள்ளை தோற்றுள்ளது.


ஓர் அரசனானது இரட்டை முற்றுகைக்காளாக்கப்பட்டால், அடுத்த நகர்வில் அரசன் இரண்டு முற்றுகைகளிலிருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும். இரண்டு முற்றுகைக்காளாக்கும் காய்களையும் கைப்பற்றுவதோ இரண்டு முற்றுகைகளையும் தடுப்பதோ முடியாத செயல்.[10] அரசனை நகர்த்துவதன் மூலம் மட்டுமே இரட்டை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிக்க முடியும். ஆனாலுங்கூட, இரட்டை முற்றுகைக்காளாக்கும் காய்களில் ஏதேனும் ஒன்றாவது அடுத்துள்ள கட்டங்களில் இருந்து, அது ஏனைய காய்களால் பாதுகாக்கப்படாவிட்டால், அரசன் அதனைக் கைப்பற்றிக் கொள்ளவும் முடியும்.

எந்தவொரு வழியிலும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால், அது இறுதி முற்றுகை எனப்படும்.[11]

முற்றுகையை அறிவித்தல்[தொகு]

நட்பு முறையிலான சதுரங்க விளையாட்டுகளில் முற்றுகைக்காளாக்கும் நகர்வைச் செய்பவர் முற்றுகையை அறிவிப்பார். எனினும் முற்றுகையை அறிவித்தல் சதுரங்கத்தின் விதிமுறைகளின் கீழ் தேவையானதன்று. மேலும் முறையான விளையாட்டுகளில் முற்றுகை அறிவிக்கப்படுவதில்லை. ஆயினுங்கூட 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை போட்டியாளர் முற்றுகையை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதுடன், விதிகளின் சில மூலங்கள் அதனை வேண்டி நின்றன.

முற்றுகையின் பயன்கள்[தொகு]

 • அரசனை இறுதி முற்றுகைக்காளாக்குவதன் மூலம் போட்டியில் வெற்றி பெறுதல்
 • தொடர்முற்றுகையின் மூலம் ஆட்டத்தைச் சமநிலைக்குள்ளாக்குதல்
 • கவையின் மூலம் ஏனைய காய்களைக் கைப்பற்றுவதற்காக முற்றுகைக்காளாக்குதல்
 • மாற்றீடு ஒன்றை வேண்டி முற்றுகைக்காளாக்குதல்
 • முற்றுகைக்காளாக்கி அரசனை நகரச் செய்வதன் மூலம் கோட்டை கட்ட முடியாமற்செய்தல்

வரலாறு[தொகு]

தொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. முற்றுகை (ஆங்கிலத்தில்)
 2. முற்றுகை (ஆங்கிலத்தில்)
 3. இறுதி முற்றுகை (ஆங்கிலத்தில்)
 4. சதுரங்கத்தின் விதிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: முற்றுகை, இறுதி, சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கிலத்தில்)
 5. முற்றுகையும் இறுதியும் சாத்தியமான நகர்வற்ற நிலையும் (ஆங்கிலத்தில்)
 6. முழுச் சதுரங்கம்: முற்றுகை, இறுதி முற்றுகை, சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கிலத்தில்)
 7. இ. 1. 01ஏ. சதுரங்கத்தின் விதிகள் (ஆங்கிலத்தில்)
 8. இறுதி முற்றுகை (ஆங்கிலத்தில்)!
 9. முற்றுகையும் இறுதி முற்றுகையும் (ஆங்கிலத்தில்)
 10. கண்டறிந்த முற்றுகையும் இரட்டை முற்றுகையும் (ஆங்கிலத்தில்)
 11. இறுதி முற்றுகை (ஆங்கிலத்தில்)
"http://ta.wikipedia.org/w/index.php?title=முற்றுகை_(சதுரங்கம்)&oldid=1369837" இருந்து மீள்விக்கப்பட்டது