முருகாற்றுப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முருகாற்றுப்படை என்னும் பெயரில் ஐந்து நூல்கள் உள்ளன.

சித்தாந்தம் என்னும் இதழில் அருணகிரிநாதர் பாடியனவாக நான்கு நூல்கள் காட்டப்பட்டுள்ளன.

  • அருள்முருகாற்றுப்படை
இது 69 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. இதன் முதலிலும் முடிவிலும் இரண்டு வெண்பாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.[1]
  • பொருள்முருகாற்றுப்படை
35 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
  • அணிமுருகாற்றுப்படை
41 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
  • வருமுருகாற்றுப்படை
64 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. இது கந்தர் சஷ்டி கவசத்தில் உள்ளது போன்ற நடையினைக் கொண்டுள்ளது.

என்பன அவை.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. என்னுடைய நாதன் எழுத்தாறு பாவாறு
    மின்னும் தலமும்தாம் ஈறாறு – மன்னுமுகம்
    ஓராறு வேதத்தின் உள்ளாறு பொன்நெடுந்தோள்
    ஈறாறு கண்ஆ(று) இரண்டு – முதல் வெண்பா

    பாலைப் பதிஉறைவாய் பன்னிரண்டு தோளுடையாய்
    மாலைக் கடம்புபடர் மார்புடையாய் – காலையினும்
    செவ்வாய் வரைகிழியச் செவ்வேல் விடுத்தருளும்
    கையாய் கடைபோகக் கா – இறுதி வெண்பா

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகாற்றுப்படை&oldid=1195438" இலிருந்து மீள்விக்கப்பட்டது