முரண்பாடான தவளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முரண்பாடான தவளை | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Pseudis paradoxa |
முரண்பாடான தவளை (Pseudis paradoxa, ஆங்கிலம்: Paradoxical frog அல்லது shrinking frog) என்பது குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு தவளை ஆகும். பெண் தவளைகள் இடும் முட்டைகளில் இருந்து தாய்த் தவளையை விட நான்கு மடங்கு பெரிய தலைப்பிரட்டைகள் உருவாகும். பின்னர் இவை தவளையாக உருமாறியவுடன் (metamorphosis) இவற்றின் உடல் பழைய அளவில் கால் பங்காகச் சுருங்கி விடும்.
பொதுவாக மற்ற இனத் தலைப்பிரட்டைகள் சிறிதாக இருந்து வளர வளரப் பெரிதாகும். ஆனால் இத் தவளை இனத்திலோ வளர வளரச் சிறிதாகும் முரண்பாடான நிகழ்வு காணப்படுகிறது. விலங்குலத்தில் இந்த முரண்பாடு மிக அதிசயமாகக் காணப்படும் ஒன்றாகும்.
இவற்றையும் காண்க [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Pseudis paradoxa தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |