முதுவன் மொழி
| முதுவன் | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், கோட்டையம், திருச்சூர் மாவட்டங்கள்; தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்கள்; ஆந்திரப் பிரதேசம் | |
| பேசுபவர்கள்: | 12,219 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் தமிழ் முதுவன் |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | muv | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
முதுவன் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 12,219 மக்களால் பேசப்படுகிறது. இது முடவன், முடுவர், முடுகர், முதுவர் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இதன் கிளை மொழிகள், மேற்கு, கிழக்கு என இரு வகையாக உண்டு. மேற்கு வகையில், மலையாள முதுவன், நாட்டு முதுவன் என இரண்டு கிளை மொழிகளும், கிழக்கு வகையில், தமிழ் முதுவன், பாண்டி முதுவன் என்னும் இரு கிளை மொழிகளும் உண்டு.
இம்மொழியினர் தங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயன்படுத்துகின்றனர். வீட்டில், ஊரில் மற்றும் சமயத் தொடர்பான விடயங்களில் தமது மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். பழைய தலைமுறையினர் தமிழை அறிந்திருந்தனர். இளைய தலைமுறையினர் இப்பொழுது தமிழை விட மலையாள மொழியைக் கூடுதலாக அறிந்திருக்கிறார்கள்.