முதலுறு வேக ஈனுலை

ஆள்கூறுகள்: 12°33′11″N 80°10′24″E / 12.55306°N 80.17333°E / 12.55306; 80.17333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலுறு வேக ஈனுலை
முதலுறு வேக ஈனுலை is located in தமிழ் நாடு
முதலுறு வேக ஈனுலை
அமைவிடம்:முதலுறு வேக ஈனுலை
நாடுஇந்தியா
அமைவு12°33′11″N 80°10′24″E / 12.55306°N 80.17333°E / 12.55306; 80.17333
நிலைUnder construction
அமைப்பு துவங்கிய தேதி2004
அமைப்புச் செலவு₹56 770 000 000
உரிமையாளர்இந்திய அணுமின் கழகம்
இயக்குபவர்பாவினி
உலை வகை(கள்)வேக ஈனுலை
நிலவரம்:சூலை 2012

முதலுறு வேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor, PFBR) இந்தியாவில் சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் கட்டமைக்கப்படும் 500மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலை அணுமின் நிலையமாகும்.[1] இதன் வடிவமைப்பிற்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) பொறுப்பேற்றுள்ளது. இது 2013ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2] 3500 கோடி (35 பில்லியன்) ரூபாய்களாக மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் தற்போது 5,677 கோடியாக (56 பில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது.[3] இந்த வகை அணு உலைகளில் தோரியம் எரிபொருட் சுழற்சி பயன்படுத்தப்படுவதால் இந்தியா இந்த ஈனுலையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது; உலகில் உள்ள உறுதிப்பட்ட தோரியம் இருப்புகளில் இரண்டாமிடத்தை இந்தியா வகிக்கிறது. இருப்பினும் கல்பாக்கத்தில் உள்ள முதலுறு வேக ஈனுலை தோரியம் அல்லாது யுரேனியம்-238ஐப் பயன்படுத்துகிறது. நீர்ம நிலையில் உள்ள சோடியத்தை குளிர்வியாகப் பயன்படுத்துகிறது.

இந்த அணு உலையின் வடிவமைப்பு 1980களில் துவங்கியது.

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலுறு_வேக_ஈனுலை&oldid=3306016" இலிருந்து மீள்விக்கப்பட்டது