முதன்மை விண்மீன் பேரடைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hubble image of the elliptical galaxy PGC 6240.[1]

முதன்மை விண்மீன் பேரடைகள் பெயர்ப்பட்டியல் ( Catalogue of Principal Galaxies (PGC)) என்பது 1989 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வானியல் பெயர்ப்பட்டியல் ஆகும். இதில் B1950 மற்றும் J2000 பூமத்தியரேகை வாள்கூறுகள் மற்றும் 73,197 விண்மீன் பேரடைகளுக்கு குறுக்கு அடையாளங்களையும் பட்டியலிட்டுள்ளது. குறுக்கு அடையாளம் பட்டியலிடப்பட்டவற்றில் 40,932 (56%) வாள்கூறுகள் 10″ க்கும் குறைவான நியமச்சாய்வுகளைக் கொண்டுள்ளன. 38 வகையான மிகப்பொது ஆதாரங்களில் இருந்து ஒட்டு மொத்தமாக 1,31,601 பெயர்கள் இப்பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வானுறுப்புக்கும் கிடைத்துள்ள கூட்டுச்சராசரி தரவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:[2]

49.102 புறவமைப்பு விவரிப்புகள்

52,954 பேரச்சு மற்றும் சிற்றச்சுத் தோற்றங்கள்

67,116 தோற்றப் பொலிவுகள்

20,046 ஆரத்திசை வேகங்கள்

24,361 இருப்பிடக் கோணங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Soft shells and strange star clusters". ESA/Hubble Press Release. http://www.spacetelescope.org/news/heic1318/. பார்த்த நாள்: 12 October 2013. 
  2. Paturel, G.; Fouque, P.; Bottinelli, L.; Gouguenheim, L.; Fouque; Bottinelli; Gouguenheim (November 1989). "An extragalactic database. I - The Catalogue of Principal Galaxies". Astronomy and Astrophysics Supplement Series 80 (3): 299–315. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-0138. Bibcode: 1989A&AS...80..299P.