முகுளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகுளம் என்பது மூளைத்தண்டின் அடிப்பகுதி ஆகும். இது தண்டுவடத்திற்கு சற்று மேலே உள்ளது. முகுளத்தில் தான் மூச்சுவிடல், இதயத் துடிப்பு, வாந்தி, தாகம் முதலியவற்றைக் கட்டுப்படுத்தும் முக்கியமான நரம்பு மையங்கள் உள்ளன. எனவே இது உயிர்முடிச்சு என்று அறியப்படுகிறது.