முகமது அடில் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகமது அடில் ஷா
அடில் ஷாகி பேரரசர்
Muhammad Adil Shah II with courtiers and attendants.jpg
ஆட்சிக்காலம் செப்டம்பர் 12, 1627 – நவம்பர் 4, 1656
முழுப்பெயர் முகமது அடில் ஷா காசி
பிறப்பிடம் பீஜப்பூர்
இறப்பு நவம்பர் 4, 1656
இறந்த இடம் பீஜப்பூர்
முன்னிருந்தவர் இப்ராகீம் அடில் ஷா II
பின்வந்தவர் அலி அடில் ஷா II
வாரிசுகள் அலி அடில் ஷா II
அரச குடும்பம் ஓஸ்மான் மாளிகை
அரச வம்சம் அடில் ஷாகி பேரரசு
தந்தை இப்ராகீம் அடில் ஷா II
தாய் தாஜ் சுல்தானா
சமய நம்பிக்கைகள் சுன்னி இஸ்லாம்

இந்தியாவை சுல்தான் மரபினைச் சேர்ந்தவர்கள் பலர் ஆண்டு உள்ளனர். சிந்த் சுல்தான்கள், டெல்லி சுல்தான்கள், மாபர் சுல்தான்கள், பீஜப்பூர் சுல்தான்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க சுல்தான் மரபினர் ஆவர். பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா (Mohammed Adil Shah) இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஒரு நபர் ஆவார். வடக்கே பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு இவர் ஆட்சி செய்தாலும் தென்னிந்தியாவில் இவர் தனது ஆளுகையைச் சில இடங்களில் நிறுவினார்.

விஜய நகரின் வீழ்ச்சியும் அடில்ஷாவின் எழுச்சியும்[தொகு]

கி.பி 1646 ல் விஜயநகரப் பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன் ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்தான். அவனது இந்த தோல்வி தமிழகத்தில் இருந்த அனைத்து நாயக்க அரசுகளையும் ஆட்டம் காண வைத்தது. முக்கியமாக விஜய நகரப் பேரரசின் விசுவாசிகளான தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு வந்தனர்.

தஞ்சை நாயக்கர்களின் இந்த நிலையை அறிந்த அடில்ஷா அவர்களை தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தார். கி.பி 1649ல் பீஜப்பூர் படை செஞ்சியை போரிட்டு வென்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அடில்_ஷா&oldid=1498635" இருந்து மீள்விக்கப்பட்டது