மீரா குமார்
| மீரா குமார் | |
|
|
|
| தொகுதி | சசாரம், பீகார் |
|---|---|
| அவை | மக்களவை |
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 2 ஜூன் 2009 |
|
| முன்னவர் | சோம்நாத் சட்டர்ஜி |
|
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 1 ஜூன் 2009 |
|
| அரசியல் கட்சி | இ.தே.கா |
|
|
|
| பிறப்பு | 31 மார்ச்சு 1945 பாட்னா, பீகார் |
| வாழ்க்கைத் துணை |
மஞ்சூல் குமார் |
| பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள் |
| இருப்பிடம் | புது தில்லி |
| ஜூன் 2 இன் படியான தகவல், 2009 மூலம்: [1] |
|
மீரா குமார் (பிறப்பு;மார்ச் 31, 1945) இந்திய அரசியல் வாதியும் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். முன்னாள் துணைப் பிரதமரும் மிக முக்கியத் தலித் தலைவர் பாபு ஜெகஜிவன்ராம் மற்றும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான இந்திராணி தேவி தம்பதியர்களின் புதல்வியும் ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள். இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு 2009 மே மாதம் நடைபெற்றத் தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார்.