மீமாம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மெய்யியலில், மீமாம்சம் (Mīmāṃsā, சமக்கிருதம்: मीमांसा), என்பது வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஒன்றாகும். இதை பூர்வமீமாம்சம் (கர்ம காண்டம்) என்றும் உத்தரமீமாம்சம் (ஞான காண்டம்) என்று இரு காண்டங்களாக பிரித்துள்ளனர். பூர்வ மீமாம்சம் நான்கு வேதங்களுக்குப் பொருள் கூறும். இதனை தொகுத்தவர் ஜைமினி முனிவர். உத்தர மீமாம்சத்தை தொகுத்தவர் பாதராயனர். நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர்.

பூர்வ மீமாம்சம்[தொகு]

இந்நூலை பனிரெண்டு காண்டங்களாகவும், அறுபது அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுப் பல சூத்திரங்களாகச் செய்யப்பட்டுள்ளது. பூர்வமீமாசைக்கு, சபரர், குமாரிலர் மற்றும் சாயனர் ஆகியவர்கள் விளக்க உரைநூல்கள் எழுதியுள்ளனர். பூர்வ மீமாம்சையில், பிரம்மம், படைப்பு, மோட்சம் குறித்த விசாரணைகள் இல்லை. இதில் பல்வேறு யாகங்கள், யக்ஞங்கள் செய்வது குறித்தான விவரங்கள், விரதங்கள், மற்றும் பூசை புனஸ்காரங்கள் குறித்தான விவரங்கள் உண்டு.

பூர்வ மீமாம்சையின் தன்மைகள்[தொகு]

  • பூர்வ மீமாம்சையை கர்ம காண்டம் என்பர்.
  • பிரமாணத்தால் (நான்கு வேதங்கள் எனும் கருவி மூலம்) உண்மை அறிவது
  • பூர்வ மீமாம்சகர்கள் (நான்கு வேதங்களை மட்டும் பின்பற்றுபவர்கள்) [[வேதம்|வேதத்தில்] சொல்லப்பட்ட வேள்விகளுக்கும், சடங்குகளுக்கும் முதன்மைத் தன்மை வழங்குபவர்கள்.
  • பூர்வ மீமாம்சகர்கள் கடவுளை வேண்டாமல், தாங்கள் செய்யும் கர்மமே (வேள்விகள்) பயனளிக்கும் என்ற கொள்கை உடையவர்கள்.
  • சில பூர்வ மீமாம்சகர்கள் உருவமுடைய கடவுளை சடங்கு சம்பிரதாயமாக வணங்குபவர்கள்.
  • கர்ம யோகத்தால் மட்டுமே இறைவனை எளிதாக அடையலாம் எனும் நம்பிக்கை கொண்டவர்கள்.
  • இறைவனும் சீவனும் வேறு வேறு தன்மையுடைவர்கள் என்ற துவைதம் எனும் இருமைக் கொள்கை உடையவர்கள்

உத்தரமீமாம்சையின் தன்மைகள்[தொகு]

  • வேதங்களின் இறுதிப் பகுதியில் வரும் உத்தரமீமாம்சையை ஞான காண்டம் என்பர்.
  • உத்தரமீமாம்சகர்கள் வேதங்களில் சொல்லிய வேள்விகளுக்கும், சடங்குகளுக்கு முக்கியத்தவம் தராமல் உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் போன்ற வேதாந்தங்களில் சொல்லியுள்ள கருத்துக்களின் கொள்கையுடன் வாழ்பவர்கள்.
  • உத்தரமீமாம்சகர்கள்,உருவமற்ற இறைவனை மனதால் தியானிப்பவர்கள்.
  • ஞானயோகத்தினால் மட்டுமே நிர்குணபிரம்மத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கையாளர்கள்.
  • பராமாத்மாவும் (பிரம்மம்) சீவாத்மாவும் இரண்டல்ல; ஒன்றே எனும் கொள்கையுடைய அத்வைதிகள்

உசாத்துணை[தொகு]

  • நான்கு வேதங்கள் [1]
  • உபநிடதங்கள் [2]

வெளி இணைப்புகள்[தொகு]

  • பூர்வ மீமாம்சை சொற்பொழிவுகள் தமிழில் கேட்க [3] & [4]
  • உத்திர மீமாம்சை சொற்பொழிவுகள் தமிழில் கேட்க [5]
  • கிழக்கின் புனித நூல்கள் [[6]]

இதையும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மீமாம்சம்&oldid=1561270" இருந்து மீள்விக்கப்பட்டது