மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீனாட்சி சுந்தரனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.
தமிழ்ப்பணிகள் [தொகு]
எழுதிய நூல்கள் [தொகு]
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
- திருவாரூர்த் தியாகராசலீலை
- திருவானைக்காத் திருபந்தாதி
- திரிசிராமலை யமகவந்தாதி
- தில்லையமக அந்தாதி
- துறைசையமக அந்தாதி
- திருவேரகத்து யமக அந்தாதி
- திருக்குடந்தை திருபந்தாதி
- சீர்காழிக்கோவை
- குளத்தூக்கோவை
- வியாசக்கோவை
- அகிலாண்டநாயகி மாலை
- சிதம்பரேசர் மாலை
- சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
- திருநாகைக்க்ரோண புராணம்
- பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
- பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
- திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
- வாட்போக்கிக் கலம்பகம்
- திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்
ஆதாரம் [தொகு]
- தமிழ்ப்பிரியன். 2005. இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும். சென்னை: நர்மதா பதிப்பகம்.