மீடியாவிக்கி பேச்சு:Recentchangestext

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றங்கள் நன்று. -- Sundar \பேச்சு 07:39, 6 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அண்மைய மாற்றங்களில் கட்டுரை உருவாக்கத் தூண்டல்கள்[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks பக்கத்தில் 700+ கட்டுரைகள் உள்ளன. ஆனால், அனைத்துப் பங்களிப்பாளர்களும் இதனை அறிந்திருப்பதில்லை. அறிந்தாலும், கண்ணில் படாமல் இருப்பதால் உருவாக்கத் தூண்டுவதாக இல்லை. இதில் இருந்து நூறு, நூறு சிகப்பு இணைப்புகளாக அண்மைய மாற்றங்களின் மேற்பகுதியில் தந்தால், இவற்றை விரைந்து உருவாக்கத் தூண்டுதலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 100 சிகப்பு இணைப்புகள் என்பது அண்மைய மாற்றங்களைக் கீழே தள்ளி விடும் என்று கருதினால், 25 இணைப்புகள் தரலாம். --இரவி (பேச்சு) 05:21, 6 மார்ச் 2012 (UTC)

ரவி, இது அயர்ச்சியையேத் தரும் என நினைக்கிறேன். விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinksக்கு இணைப்பு வேண்டுமானால் கொடுக்கலாம். விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks பக்கத்தையும் சற்று கவர்ச்சிகரமாகத் தரலாம். அந்தப் பக்கத்தில் செல்வா குறிப்பிட்டுள்ளபடி சில தவறுதலான சிவப்பிணைப்புகளை நீக்கவும் வேண்டும். இந்தப் பட்டியலில் உள்ள கட்டுரைகளைத் தொடங்கிய (குறிப்பிட்டளவை பங்களிப்புடன்) பயனரின் பேச்சுப் பக்கத்தில் முபக,உதெ போல அறிவிப்பு இணைக்கலாம்.--மணியன் (பேச்சு) 08:57, 6 மார்ச் 2012 (UTC)

மணியன், 700+ கட்டுரைகளை ஒட்டு மொத்தமாகக் காண்பதும் அயரச் செய்ததாலேயே இப்படி யோசித்தேன். ஏதேனும் ஒரு வகையில் கூடிய கவனத்தை ஈர்க்க வேண்டும். இன்று பேச்சுப் பக்கத்தில் உரையாடத் தொடங்கிய பிறகு, ஏற்கனவே உள்ள பல கட்டுரைகளுக்கான வழிமாற்றுகளை இனங்கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்து, பத்து கட்டுரைகளாக அண்மைய மாற்றங்களில் இட்டால் உதவுமா? நன்றி--இரவி (பேச்சு) 10:21, 6 மார்ச் 2012 (UTC)

இரவி, நிச்சயமாக 700+ கட்டுரைகளை காண்கையில் அயர்வாகத் தான் உள்ளது. அதனால்தான் அதனை பகுப்புவாரியாக/பொருள்வாரியாக சிறு சிறு பட்டியல்களாகத் தருவது நலம் பயக்கும். பட்டியலைச் சரிபார்ப்பதற்கும் தொகுக்கவும் கூட எளிதாகும். சோதனையாக பத்து, பத்து கட்டுரைகளாக இடலாம். முயற்சி பயனளித்தால், ஒவ்வொரு நாளும் அதனை இற்றைப்படுத்த வேண்டியிருக்கும் :).--மணியன் (பேச்சு) 14:35, 6 மார்ச் 2012 (UTC)

மணியன், அந்தப் பட்டியலின் இன்னொரு படியை துறை வாரியாக உருவாக்க முயல்வோம். முதல் பத்து கட்டுரைகளை மங்களகரமாக இட்டுள்ளேன் :) விக்கியாண்டவர் அருள் கிடைத்தால் நாளும் பத்து கட்டுரைகளை இற்றைப்படுத்த மகிழ்ச்சியே :)--இரவி (பேச்சு) 16:49, 6 மார்ச் 2012 (UTC)

இரவி, மங்களகரமான துவக்கம் :) தொடர்புடைய ஆங்கில விக்கிப் பக்கங்களுக்கும் இணைப்பு கொடுத்தால் பயனுள்ளதாகவும் இரட்டைக் கட்டுரைகள் உருவாக்காமல் இருக்கவும் விளங்கும். இப்படிக் கொடுக்கலாமா--மார்புப் புற்றுநோய்...கட்டுரையைத் துவக்கியபின் நாள்பட்ட விக்கியர் ஆங்கில இணைப்பை நீக்கிவிடலாம்; அல்லாது நாமும் இற்றைப்படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 03:50, 7 மார்ச் 2012 (UTC)

உணவுக்குழு[தொகு]

இதற்கான ஆங்கிலக் கட்டுரையில் மற்றுமொரு விக்கியில் மட்டுமே இப்பொருளில் கட்டுரை உள்ளது. இது எவ்வாறு அனைத்து விக்கிகளிலும் இரைக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளில் வந்துள்ளது ?--மணியன் (பேச்சு) 15:07, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

பிழையா?[தொகு]

(முக்கியமாக பெயரிடல் மரபு, நடுநிலை நோக்கு) இதில் முதலில் உள்ள "(" குறி எனக்கு அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தெரியவில்லை.. ஏன்?..--shanmugam (பேச்சு) 16:38, 6 மார்ச் 2012 (UTC)

அண்மைய மாற்றங்களில் பங்களிப்பாளர் அறிவிப்புகள்[தொகு]

முன்பு, உங்களுக்குத் தெரியுமா பரிந்துரை வேண்டுகோள், விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் போன்ற அறிவிப்புகளை தள அறிவிப்பில் இட்டு வந்தோம். ஆயிரக்கணக்கான பக்கங்களின் மேலே இவற்றை இடுவதை விட, முனைப்பான பங்களிப்பாளர்கள் அடிக்கடி காணும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இவற்றை இடுவது தகும் என்று நினைக்கிறேன். கூட்டு முயற்சிக் கட்டுரை பங்களிப்பு வேண்டுகோள், முக்கிய கட்டுரைகள் உருவாக்க வேண்டுகோள் ஆகியவை நல்ல பயன் தந்துள்ளன. இதனைப் பின்பற்றி வேறு என்ன வகையான அறிவிப்புகள் / வேண்டுகோள்களை இடலாம்? எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இட்டால் பயன் இராது. ஒவ்வொன்றாக, இலக்குகள் முடிய முடியுவும் சுழற்சி முறையிலும் இடுவது இயலும். என் பரிந்துரைகள்:

கடைசி 30 நாட்களில் பங்களித்தோர்[தொகு]

கடைசி 30 நாட்களில் பங்களித்தோர் தரவு அடிக்கடி இற்றைப்படுத்தப்படாதது போல் இருப்பதால், இந்த முகவரிக்குச் சென்று குரோம் உலாவியில் "30 நாட்கள்" என்று தேடி வரும் விடைகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்துக் கொண்டு இந்தத் தரவை இற்றைப்படுத்தியுள்ளேன். இதில் தானியங்கிக் கணக்குள் சேர்த்தி இல்லை. வாரம் ஒரு முறை இத்தரவை இவ்வாறு இற்றைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 06:17, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பின்னணி வண்ணம்[தொகு]

அன்டன் அறிவிப்புப் பட்டையின் பின்னணி வண்ணத்தை மஞ்சளில் இருந்து ஆரஞ்சாக மாற்றியதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? மஞ்சள் வண்ணதில் கூடுதல் contrast இருப்பதாகப் படுகிறது. --இரவி (பேச்சு) 16:37, 19 ஏப்ரல் 2014 (UTC)

இல்லை, வண்ணம் மாறும்போது கட்டுரைகளும் மாறுகின்றன என்ற அறிவிப்பை வழங்கும் என்ற ஊகம். --AntonTalk 08:53, 20 ஏப்ரல் 2014 (UTC)
👍 விருப்பம் எழுத்துக்கள் நீல நிறத்தில் இருப்பதால் அதற்குப் பொருத்தமான மெல்லிய நிறங்ங்களைப் பின்னணியில் பயன்படுத்தலம். சில வேளைகளில் நிறங்களும் கூடப் பயனர்களை ஈர்த்துவிடும்!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 23:44, 20 ஏப்ரல் 2014 (UTC)
நல்ல உத்தி. சரி, இனி ஆரஞ்சையும் மஞ்சளையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவோம்.--இரவி (பேச்சு) 10:32, 21 ஏப்ரல் 2014 (UTC)