மீச்சிறு முழுஎண் சார்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீச்சிறு முழுஎண் சார்பின் வரைபடம்

கணிதத்தில் மீச்சிறு முழுஎண் சார்பு (least integer function) என்பது மெய்யெண்களின் மீது வரையறுக்கப்பட்டதொரு சார்பு. இச்சார்பின் கீழ் ஒரு மெய்யெண் x இன் சார்பலன் அம்மெய்யெண்ணை விடப் பெரிய முழுஎண்களுக்குள் மிகச்சிறிய முழுஎண் ஆகும்.[1]. மேல்மட்டச் சார்பு (ceiling function) எனவும் இச்சார்பு அழைக்கப்படுகிறது. இதன் குறியீடு எடுத்துக்காட்டாக,

குறியீடு[தொகு]

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் இருபடி நேர்எதிர்மை -குறித்த தனது மூன்றாவது நிறுவலில் (1808) மீப்பெரு முழுஎண் சார்புக்கு சதுர அடைப்புக் குறியீட்டைப் () பயன்படுத்தினார்[2] கென்னத் இ. ஐவர்சன் 1962 ஆம் ஆண்டு மீப்பெரு முழுஎண் சார்பு மற்றும் மீச்சிறு முழுஎண் சார்பு ஆகிய இரு சார்புகளையும், மற்றும் அவற்றின் குறியீடுகளாக ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தும்வரை இக்குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது[3][4][5]. தற்போது இருவிதமான குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.[6]

வரையறையும் பண்புகளும்[தொகு]

மீச்சிறு முழுஎண் சார்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது

ஓரலகு நீளமுள்ள பாதி திறந்த இடைவெளியில் ஒரேயொரு முழுஎண் மட்டுமே இருக்கும் என்பதால், x என்ற மெய்யெண்ணுக்கு,

என்றவாறு m , n என இரு தனித்த முழுஎண்கள் அமைகின்றன. இதனைப் பயன்படுத்தி மீச்சிறு முழுஎண் சார்பின் வரையறையைப் பின்வருமாறும் கூறலாம்:

  • (n ஒரு முழு எண்)
  • (x, y இரு மெய்யெண்கள்)
  • (மீச்சிறு முழுஎண் சார்பு ஒரு தன்னடுக்குச் சார்பு)

மீப்பெரு முழுஎண் சார்புடன் தொடர்பு[தொகு]

x முழு எண்ணாக இருந்தால், இருந்தால் மட்டுமே, இதில் சமக்குறி உண்மையாகும். அதாவது:

தொடர்ச்சி[தொகு]

மீச்சிறு முழுஎண் சார்பு தொடர்ச்சியான சார்பல்ல; எனினும் அது கீழ் அரைத்தொடர்ச்சியானதாகவும் துண்டுவாரி மாறிலிச் சார்பாகவும் அமையும். கட்டுரையின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள வரைபடத்திலிருந்து இவ் விவரத்தைக் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Graham, Knuth, & Patashnik, Ch. 3.1
  2. Lemmermeyer, pp. 10, 23.
  3. e.g. Cassels, Hardy & Wright, and Ribenboim use Gauss's notation, Graham, Knuth & Patashnik, and Crandall & Pomerance use Iverson's.
  4. Iverson, p. 12.
  5. Higham, p. 25.
  6. See the Wolfram MathWorld article.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Hazewinkel, Michiel, ed. (2001), "Floor function", Encyclopedia of Mathematics, Springer, ISBN 978-1556080104
  • Štefan Porubský, "Integer rounding functions", Interactive Information Portal for Algorithmic Mathematics, Institute of Computer Science of the Czech Academy of Sciences, Prague, Czech Republic, retrieved 24 October 2008
  • Weisstein, Eric W., "Floor Function", MathWorld.
  • Weisstein, Eric W., "Ceiling Function", MathWorld.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீச்சிறு_முழுஎண்_சார்பு&oldid=3754958" இலிருந்து மீள்விக்கப்பட்டது