மிசிசிப்பி ஆறு
| மிசிசிப்பி ஆறு | |
|---|---|
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மாநிலங்கள் | மினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இலினொய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்சா, மிசிசிப்பி, லூசியானா |
| முதன்மை நகரங்கள் |
மினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, செயின்ட் லூயிஸ், மிசூரி, மெம்ஃபிஸ், டென்னசி, பாடன் ரூஜ், லூசியானா, நியூ ஓர்லென்ஸ், லூசியானா |
| நீளம் | 2,320 மைல் (3,734 கிமீ) |
| வடிநிலம் | 11,51,000 ச.மைல் (29,81,076 கிமீ²) |
| வெளியேற்றம் | பாடன் ரூஜ், LA |
| - சராசரி | [1] |
| வெளியேறும் பிற இடங்கள் |
|
| - சென். லூயிஸ் | [2] |
| மூலம் | இத்தாஸ்கா ஏரி |
| - அமைவிடம் | இத்தாஸ்கா அரச பூங்கா, கிளியர்வாட்டர் கவுண்டி, MN |
| - ஆள்கூறுகள் | |
| - உயரம் | 1,475 அடி (450 மீ) |
| கழிமுகம் | மெக்சிக்கோ குடா |
| - அமைவிடம் | பைலட்டவுன், பிளாக்மைன்ஸ் பாரிஷ், LA |
| - ஆள்கூறுகள் | |
| - உயரம் | 0 அடி (0 மீ) |
| முதன்மைக் கிளை ஆறுகள் |
|
| - இடம் | ஒஹைய்யோ ஆறு |
| - வலம் | மிசூரி ஆறு, ஆர்கன்சா ஆறு |
மிசிசிப்பி ஆறு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ளஇத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசூரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும்.
மிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.
மிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசூரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Median of the 1,826 daily mean streamflows recorded by the USGS for the period 1978-1983 at Baton Rouge.
- ↑ Median of the 14,610 daily mean streamflows recorded by the USGS for the period 1967-2006.