மிராஜ் 2000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டஸால்ட் மிராஜ் 2000 | |
|---|---|
| வகை | பல்வகை தாக்குதல் வானூர்தி |
| தயாரிப்பாளர் | டஸால்ட் ஏவியேஸன் |
| வடிவமைப்பு | டஸால்ட் ஏவியேஸன் |
| வெள்ளோட்டம் | 10 மார்ச் 1978 |
| அறிமுகப்படுத்தியது | நவம்பர் 1982 |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர் | பிரான்ஸ் வான்படை, இந்திய வான்படை, ஐக்கிய அரபு எமிரேட் வான்படை |
| எண்ணிக்கை | 600+ |
| அலகின் செலவு | US$23 மில்லியன் |
| முந்தைய வடிவம் | டஸால்ட் மிராஜ் III |
| வேறுபாடுகள் | மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி, மிராஜ் 2000-5 |
டஸால்ட் மிராஜ் 2000 என்பது பிரான்ஸ் நாட்டு சண்டை வானூர்தியாகும். இது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஸன் நிறுவனத் தயாரிப்பாகும். இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் விமானம் ஆகும். இது பளு குறைந்த விமானமாக, மிராஜ் 3 எனும் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை விமானங்கள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி போன்ற தாக்குதல் விமானங்களும், மிராஜ் 2000-5 என்ற மேம்படுத்தப்பட்ட விமானங்களும், மேலும் பல்வேறு வகையான விமானங்களும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்படி சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு ஒன்பது நாடுகளில் சேவையில் உள்ளது
வெளியிணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Dassault Mirage 2000 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- பொதுவான தகவல்கள்
- Dassault Aviation Mirage 2000 page
- Mirage 2000 page Globalsecurity.org
- Mirage 2000 page on Airforce-technology.com
- Mirage 2000 page on FAS.org
- Mirage 2000 and 4000 page on wingweb.co.uk
- IAF Mirages
- செய்திகள்