மிராக் மிர்சா கியாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிராக் மிர்சா கியாத் பேரரசர் அக்பரின் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த பாரசீகக் கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே கிழக்குப் ஈரான், மத்திய ஆசியா போன்ற பகுதிகளில், ஏரத், புக்காரா போன்ற நகரங்களில் கட்டிடங்களை வடிவமைத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம், தில்லியில் உள்ள புகழ் பெற்ற உமாயூனின் சமாதியை வடிவமைத்துக் கட்டுவதற்கு மிராக் மிர்சா கியாத்தை ஏற்பாடு செய்தார்.

இந்தியாவுக்கு வெளியிலும், பின்னர் இந்தியாவிலும், இக் கட்டிடக் கலைஞர் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலை தொடர்பான அறிவும் அனுபவங்களும், அக்பர் காலத்திய முகலாயக் கட்டிடக்கலை தனித்துவமான வடிவங்களுடன் வளர்ச்சியடைவதற்குப் பங்களிப்புச் செய்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

கட்டி முடிப்பதற்கு எட்டு ஆண்டுகள் பிடித்த உமாயூன் சமாதி நிறைவுறுவதற்கு முன்பே மிராக் மிர்சா கியாத் இறந்துவிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிராக்_மிர்சா_கியாத்&oldid=3065607" இலிருந்து மீள்விக்கப்பட்டது