மின்னணுக்கற்றை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cathode rays casting a shadow on the wall of a Crookes tube
மின்னணுக்கற்றை அல்லது கதோட் கதிர் (Cathode ray) (எதிர்மின் முனை கதிர்கள் என்றும் அழைக்கபடுகிறது) என்பது வெற்றிடத்தில் எலெக்ட்ரான்களின் பாய்ச்சல் ஆகும். தாழ் அமுக்கத்தில் அடைக்கப்பட்ட வாயுவிற்கு உயர் மின்னழுத்த வேறுபாடு பிரயோகிக்கப்படும் போது கதோட்டிலிருந்து ஒரு வகையான கதிர்ப்புக்கள் வெளிச்செல்வது அவதானிக்கப்பட்டது. இது கதோட்டிலிருந்து வெளிப்படுவதால் இது கதோட் கதிர் எனப்படுகிறது. தாழ் அமுக்கமாக 0.01atm பயன்படுயத்தப்படும். உயர் மின்னழுத்த வேறுபாடு அண்ணளவாக 11000v பயன்படும்.