மிசுக்கின் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசர் லெவ் நிகோலெவிச் மிசுகின் (மிசுக்கின்), பிரபல உருசிய எழுத்தாளரான பியோடோர் தசுதாயெவ்சுகி எழுதிய 'தி இடியட்' என்ற கதையின் பிரதான கதைமாந்தர் ஆவார். இக்கதைமாந்தரின் பண்புகளால் கவரப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் சண்முகம் ராசா, தன் பெயரை மிசுகின் என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதைமாந்தர்[தொகு]

உருசிய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கி, தன் கதையில் முழுவதும் நல்ல குணத்துடன் கூடிய இயற்கையான மனிதரைப் பற்றி எழுத விரும்பினார். இக்கதையில், அவன் 19ஆம் நூற்றாண்டின் புனித பீட்டர்ஸ்பர்க் சமூகத்தில் முட்டாள் என அழைக்கப்பட்டான். தன் இளம்வயதை சுவிட்சர்லாந்தில் கழிக்கிறான். பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வளரும் இளைஞனாக இருந்தாலும் நற்குணம் கொண்டவனாக வாழ்கிறான். 26 வயதாகும்போது உருசிய நாட்டிற்குத் திரும்புகிறான். புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்து சமூகத்தில் முட்டாள் என அழைக்கப்படுகிறான், ஆனால் அதீத உணர்ச்சிகளில் கதைமாந்தர்கள் அனைவரையும் மிஞ்சுகிறான். நாசுடாசியா பிலிப்பினோவா பற்றிய அத்தியாயத்தில், இவனது சிறந்த செயல்பாடுகள் பிறருக்கு எப்படி முட்டாள்தனமாகத் தெரிகின்றன என்பதைக் கூறுகிறார் ஆசிரியர். யெபாச்சின் என்னும் அதிகாரியிடம் வேலைதேடிப் போகும் வேளையிலே கன்யா அங்கு வருகிறான். யெபாச்சின், நாசுடாசியாவிடம் காதலை சொல்லுமாறு கன்யாவை ஊக்கப்படுத்துகிறார். கன்யா அவளிடம் சொல்லிவிட்டுத் திரும்புகிறான். கன்யாவிடம் தன் படமொன்றை கொடுத்துவிட்டுச் செல்கிறாள். இருவரும் அப்படத்தை பார்த்து வியக்கின்றனர். அரசன் அப்பெண்ணின் அழகில் மயங்குகிறான். அரசன் பக்கத்து அறைக்குச் சென்று யெப்பாச்சினின் மனைவியையும் மூன்று மகள்களையும் காண்கிறான். பேசிக்கொண்டிருக்கும்வேளையில், அக்லயா என்னும் பெண் (மகள்கள் மூவரில் ஒருத்தி) நாசுடாசியாவைப் போல அழகாய் இருப்பதாகக் கூறுகிறான். இவருக்கு நாசுடாசியாவைப் பற்றித் தெரிந்திருப்பது கண்டு நால்வரும் வியந்தனர். ஆனால், அரசனோ அவள் நிழற்படத்தை யெப்பாச்சினின் அறையில் அவருடன் பார்த்துக் கொண்டிருந்தாகக் கூறினான். யெபாச்சின்னின் மனைவி அப்படத்தைப் பார்க்க விரும்புவதாகவும் அதை எடுத்துவருமாறும் வேண்டுகிறாள். அக்லயாவைப் பற்றி அறிந்திருந்ததால் கன்யாவிற்கு இன்னிலை சங்கடம் அளித்தது. அரசன் சரியான ஒன்றையே செய்கிறான், ஆனால் அது நிகழ்காலத்திற்கு எதிராய் அமைந்துவிடுகிறது. எப்படி நாசுடாசியா மீதான பரிவின் காரணமாக அவளைக் காதலித்தானோ, அதே போல், அவனைச் சுற்றியுள்ள கதைமாந்தர்களைக் காக்க விரும்பி, அக்லயாவை காதலிக்கிறான். இறுதியில் அக்லயாவைத் தேர்ந்தெடுக்கிறான் அரசன், நாசுடாசியா ரோகோசின்னுடன் ஓடிவிடுகிறாள். நசுடாசியா மிசுகினின் எளிய குணத்தாலும், அறிவுத் திறனிலும் கவரப்படுவதால், ரோகோசின் மிஷ்கின் அரசனின் மீது பொறாமை கொள்கிறான். அரசனின் தயாள குணத்தினால் ரோகோசினால் இறுதிவரையில் அவனை மன்னிக்கவே முடியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசுக்கின்_(கதைமாந்தர்)&oldid=3876770" இலிருந்து மீள்விக்கப்பட்டது