மிகைவெப்ப விரும்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மிகைவெப்ப விரும்பிகள் (Hyperthermophile) என்பன ஒருவகை உச்ச விரும்பிகள் ஆகும். இவை மிகச் சூடான சூழலிலும் (60 முதல் 100 டிகிரி செல்சியசு வரை) வாழக் கூடியவை. 80 டிகிரி செல்சியசில் இவை நன்கு வளரக் கூடியவை. மிகைவெப்ப விரும்பிகள் பெரும்பாலும் ஆர்க்கியா தொகுதி உயிரினங்களே. சில பாக்டீரியங்களும் மிகைவெப்ப விரும்பிகளாக உள்ளன. பல மிகைவெப்ப விரும்பிகள் அமில விரும்பிகளாகவும் உள்ளன. இவை அமிலவெப்ப விரும்பிகள் என்று அழைக்கப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிகைவெப்ப_விரும்பி&oldid=1359014" இருந்து மீள்விக்கப்பட்டது