அலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாழையிலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாழையிலி அல்லது அலோகம் (Non-metal) என்பது வேதியியலில் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற மாழை எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடும் மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80 -உக்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் இயற்பியல் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.

மாழையிலிகள்:

மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:

  1. வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)
  2. இவை காடி ஆக்சைடுகளாகும் (ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)
  3. திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)
  4. அடர்த்திக் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
  5. குறைந்த உருகுநிலைகளும் கொதிநிலைகளும் கொண்டவை
  6. அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=1371259" இருந்து மீள்விக்கப்பட்டது