மாலை மாற்று
மாலை மாற்று (Palindrome) என்பது எந்தத் திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.[1]
தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி, மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலை மாற்று அடங்கும்.[2]
மாலை மாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.[3]
பொருளடக்கம் |
வரலாறு[தொகு]
இது வரையில் கண்டறியப்பட்ட பழைய மாலை மாற்றானது கி. மு. 79ஐச் சேர்ந்த இலத்தீன் சொல்லான Sator Arepo Tenet Opera Rotas என்பதாகும்.[4]
வகைகள்[தொகு]
சொல்[தொகு]
தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும்..
ஆங்கிலத்தில் நீண்ட மாலை மாற்று[தொகு]
ஆக்சுவோர்டு ஆங்கில அகரமுதலியில் மாலை மாற்றாகவுள்ள நீண்ட சொல் Tattarrattat என்பதாகும்.
தொடர்கள்[தொகு]
தமிழ் மொழியில் தேரு வருதே என்ற தொடர் மாலை மாற்றாக அமைந்துள்ளது.[5] ஆங்கிலத்தில் Was it a cat I saw?, Do gees see God?, A Toyota's a Toyota, A nut for a jar of tuna, Madam, I am Adam போன்ற தொடர்கள் மாலை மாற்றுகள் ஆகும். பொதுவாக, மாலை மாற்றுத் தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து-சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை.
பெயர்கள்[தொகு]
ஆங்கிலத்தில் Anna, Hannah, Ada, Bob, Eve போன்ற பெயர்கள் மாலை மாற்றுகளாக அமைந்துள்ளன.
பாடலில்[தொகு]
சம்பந்தர்[தொகு]
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.[6] [7]
கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.
- யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
- காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
- இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.
- பாடலின் பொருள்
- யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
- நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
- யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
- காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
- காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
- காழீயா-சீர்காழியானே
- மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
- மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே
- இப்படிப் பத்துப் பாடல்கள் உள்ளன.
| விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |
பிறர்[தொகு]
மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணம் ஆகிய தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பாக்கள் உள்ளன.[8]
எளிய பாடல்[தொகு]
- தேரு வருதே மோரு வருமோ
- மோரு வருமோ தேரு வருதே
- இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்
- பாடலின் பொருள்
- வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மாலை மாற்று (ஆங்கிலத்தில்)
- ↑ மாலைமாற்று PALINDROME பாகம் 2
- ↑ மாலை மாற்று எடுத்துக்காட்டுகள் (ஆங்கிலத்தில்)
- ↑ மாலை மாற்று எடுத்துக்காட்டுகள் (ஆங்கிலத்தில்)
- ↑ மாலைமாற்று PALINDROME பாகம் 1
- ↑ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். மாலை மாற்றுத் திருப்பதிகம். திருப்பிரமபுரம்.
- ↑ மாலைமாற்று PALINDROME பாகம் 4
- ↑ 117 117. சீகாழி
வெளி இணைப்புகள்[தொகு]
- விகடகவியும் மாலை மாற்றும் (தமிழில்)