மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்)
| மார்த்தாண்ட வர்மா | |
|---|---|
| இயக்குனர் | பி. வி. ராவு |
| தயாரிப்பாளர் | ஆர். சுந்தர் ராச் |
| கதை | பி. வி. ராவு (திரைக் கதை) சி. வி. இராமன் பிள்ளை (நாவல்) |
| நடிப்பு | செய்தேவ் எ.வி.பி மேனன் தேவகி பத்மினி |
| ஒளிப்பதிவு | பாண்டுரங்க். இ. நாயிக் |
| விநியோகம் | சிரீ ராசேச்வரி ஃபிலிம்ச் |
| வெளியீடு | 1933 (இந்தியா) |
| கால நீளம் | 118 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் (பேசாத படம்) |
மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலான வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத கருப்பு வெள்ளை மலையாளத் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத் துறையில் வெளியான இரண்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் திரைப்படம் இது[1][2].
பொருளடக்கம் |
கதைப் பின்னல் [தொகு]
சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலை அடிபடையாகக் கொண்ட கதை.[1][2][3]
நடிப்பு [தொகு]
இத் திரைப்படத்தில் நடித்தவர்கள்[4]:
- செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
- எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
- வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
- பத்மினி - பாறுக் குட்டி
- தேவகி
- வி. சி. குட்டி
- எச். வி. நாத்
- சுந்தரம் ஐயர்
வெளியீடு [தொகு]
இந்த திரைப் படம் வெளியிடப் போது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்கு பிறகு இத் திரைப் படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப் பட துறையில் மற்றும் இலக்கிய பதிப்பக துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கை குறித்தது.
இத் திரைப் படத்தின் ஒரு பதிப்பை புனேயிலுள்ள தேசிய திரைப் பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தபட்டிருகிறது[5].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 கெ. வி, ராமன் குட்டி (1999). "Malayalam Cinema -The Pageant and the Parade". Essays on the Cultural Formation of Kerala literature, Art, Architecture, Music, Theatre, Cinema. கெ.சி.எச்.ஆர் பப்லிகேசன்ச்.
- ↑ 2.0 2.1 2.2 சுதீப் கீதிகா (திசம்பர் 12, 2009). "Houseful!". மெட்ரோ ப்லச். திருவனந்தபுரம்: THE HINDU.
- ↑ 3.0 3.1 பிந்து மேளன். எம். (சூன் 2009). "Romancing history and historicizing romance". Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s. புது தில்லி: செமினார்: கணிணி இணய பதிப்பு.
- ↑ "Documentation". Search on Cinema. பூனே: National Film Archive of India. பார்த்த நாள் சனவரி 30, 2009.
- ↑ கய் ராண்டூர் (அக்டோபர் 18, 2001). "Mylapore and movies". Reflections/Reminiscences. சென்னை: THE HINDU.