மாருதி சுசூக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது (BSE MARUTI, NSE MARUTI) |
|---|---|
| நிறுவுகை | 1981[1] |
| தலைமையகம் | |
| முக்கிய நபர்கள் | |
| தொழில்துறை | தானுந்து |
| உற்பத்திகள் | தானுந்துகள் |
| வருமானம் | ▲$2.5 பில்லியன் (2005) |
| பணியாளர் | 6,903[2] |
| தாய் நிறுவனம் | |
| இணையத்தளம் | www.marutisuzuki.com |
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் (Maruti Suzuki India Limited) (தேபச: MARUTI, முபச: 532500) இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.