இராவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாயாசுரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராவணன்
ஆயுதங்களுடன் இராவணன்.jpg
ஆயுதங்களுடன் இராவணன்
திரிலோகம் அதிபதி
துணை வண்டார் குழலி[சான்று தேவை], இராமாயணப்படி மண்டோதரி
அருள் தரக் காலம் தாழ்த்திய அம்மையப்பனாகிய சிவனை அவனது கயிலாய மலையுடன் இராவணன் தூக்கும் இந்தியா, எல்லோரா சிற்பம்

இராவணன் என்பவர் இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசரும் [1], இராவண காவியத்தின் காப்பியத் தலைவனும் ஆவார்.[2] இராவணன், தசக்கிரீவன், இலங்கேஸ்வரர், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களின் இராவணன் அழைக்கப்பெறுகிறார். பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.[3]

மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும் [4], சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது.

சிவத் தலங்களில் சிவனது வீதியுலாவின் பொழுது பத்து தலைகொண்ட இராவணனது உருவம் சுவாமி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.

பெயர் விளக்கம்[தொகு]

இராவணன் - இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு.[5] இராவணன் - இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.[6]

பிறப்பும் இல்லறமும்[தொகு]

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகர்ணன், விபீடணன் என மூன்று ஆண் பிள்ளைகளையும் [[காமவல்லி(சூர்ப்பனகை)]] என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டார். முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் சேயோன்(மேகநாதன்) என்ற மகன் பிறந்தான்.

இராமாயணப்படி, இராவணனின் மனைவி கற்புக்கரசி மண்டோதரி.

ஆரியர் வருகை[தொகு]

வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கு கோசிகன் போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.

இராம சகோதரர்களின் கொலைகள்[தொகு]

வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன் எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புறுத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இணங்காததால் இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்துக் கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றார்.[சான்று தேவை]

இராமாயணப்படி, இராமரையும் பின்னர் இலக்குவனையும் கண்டு விரும்பி, ஏற்றுக்கொள்ள வற்புறுத்திய இராவணனின் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அனுப்பினார் இலக்குவன். மூக்கு அறுபட்டதால் இரு அரசகுமாரர்களையும் பழிவாங்கத் தூண்டிய சகோதரியின் பேச்சைக் கேட்டு சேனையோடு வந்த கரனும் கொல்லப்பட்டான்.[7]

சீதையை இராவணன் கவர்தல்[தொகு]

படைத்தலைவனும், தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம் வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாக போற்றினார்.

விபீடணன் வெளியேறல்[தொகு]

இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு விபீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதையை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது நல்லது என்றார். விபீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் விபீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார்.

கும்பகர்ணன், சேயோன், இராவணன் வீர மரணம்[தொகு]

இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகர்ணன் போரில் வீர மரணமடைந்தார். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணனை அவருடைய மகன் சேயோன் தேற்றினார். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.

இராமனால் இராவணின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார். விபீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தார். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தார்.

இராமாயணத்தில் இராவணன்[தொகு]

இராமனுக்கு நேர் எதிராகவும், இராமனின் மனைவியான சீதையின் அழகில் மயங்கி அவளை இலங்கைக்குக் கடத்திச்சென்று சிறைவைத்ததாகவும், அதனால் வடயிந்திய அரசனான இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதாகவும் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்று, இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய நினைத்தான். இவன் தன் மனைவியாக மண்டோதரியை அடைந்தான். மண்டோதரி கற்பில் சிறந்த பெண்ணாக விளங்கினதால் கற்புக்கரசி என்று போற்றினர். இவனது அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தார்கள். வேதவதி, ரம்பா ஆகியோர் இவர்களில் சிலர்.

இலங்கையரைப் பொறுத்தமட்டில் இராவணன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் கருத்தே மேலோங்கியுள்ளது. இலங்கைவாழ் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவரிடையேயும் அதே கருத்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இராவணனை இராமனுக்கு எதிரானவனாக இராமாயணம் சித்தரிப்பதனால், இராவணனை ஒரு தீயப்பாத்திரமாக பலர் வரையறை செய்கின்றனர்.

குடும்பம்[தொகு]

இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். இராவணனின் மனைவி மண்டோதரி. விபீடணன் கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர். அட்சயகுமாரன், மாயசுரன், இந்திரசித்து இராவணனின் மகன்கள்.

வேத வித்தகன்[தொகு]

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.

சிவ பக்தனாக இராவணன்[தொகு]

இராவணன் சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர்.[4] இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆத்மலிங்கத்தினை இராவணனுக்கு தந்தார். இதை இலங்கையில் வைக்கும் வரை தரையில் எங்கும் வைக்கவேண்டாமென அறிவுரையும் கூறினார். ஆனால் தேவர்களின் சூட்சியால் இராவணனால் அந்த ஆத்ம லிங்கத்தினை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இராவணனின் திராவிட மீளுருவாக்கம்[தொகு]

இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது .

இலங்கையர் நம்பிக்கை[தொகு]

இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.

பத்து தலைகள்[தொகு]

பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் கலம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.

இராவணன் இயற்றிய நூல்கள்[தொகு]

இராவணன் மருத்துவ துறை சம்மந்தமாக இருபத்து ஏழு(27) நூல்களை இயற்றியுள்ளார்.[8]

 1. உடற்கூறு நூல்
 2. மலை வாகடம்
 3. மாதர் மருத்துவம்
 4. இராவணன் – 12000
 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
 6. இராவணன் வைத்திய சிந்தாமணி
 7. இராவணன் மருந்துகள் - 12000
 8. இராவணன் நோய் நிதானம் - 72 000
 9. இராவணன் – கியாழங்கள் – 7000
 10. இராவணன் வாலை வாகடம் – 40000
 11. இராவணன் வர்ம ஆதி நூல்
 12. வர்ம திறவுகோல் நூல்கள்
 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
 14. யாழ்பாணன் – பொது அகராதி
 15. பெரிய மாட்டு வாகடம்
 16. நச்சு மருத்துவம்
 17. அகால மரண நூல்
 18. உடல் தொழில் நூல்
 19. தத்துவ விளக்க நூல்
 20. இராவணன் பொது மருத்துவம்
 21. இராவணன் சுகாதார மருத்துவம்
 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
 23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
 24. இராவணன் பொருட்பண்பு நூல்
 25. பாண்ட புதையல் முறைகள் – 600
 26. இராவணன் வில்லை வாகடம்
 27. இராவணன் மெழுகு வாகடம்

படம்[தொகு]

காண்க[தொகு]

கருவி நூல்[தொகு]

 • இராவண காவியம் - புலவர் குழந்தை
 • கம்ப ராமாயணம்
 • க.தங்கேஸ்வரி (ப - 8),ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய சமுதாயப் பணிகள்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. என்தமிழர் பெருமான் இராவணன்காண்! பாரதிதாசன் - வீரத்தமிழன்
 2. http://www.tamilvu.org/courses/degree/a011/a0114/html/A0114332.htm கதைமாந்தர்
 3. http://temple.dinamalar.com/news_detail.php?id=18975 ராவணனுக்கு பத்து தலை வந்தது எப்படி?
 4. 4.0 4.1 இராவணன் மேலது நீறு - திருவாலவாய் (பாடல் எண்:8)
 5. ஈன்றவர் உவந்து மக்கட்கு இராவணன் இவனாம் இலங்கைக் காண்டம் ;1 இராவணப் படலம், 4
 6. ஞா. தேவநேயப் பாவாணர், "தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை" - ('செந்தமிழ்ச் செல்வி'- சூலை 1931 ), இலக்கணக் கட்டுரைகள், பக் 5,
 7. இராமாயணம்; சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி; வானதி பதிப்பகம்; பக்கம் 206-224
 8. http://ta.wikisource.org/s/j1 விக்கி மூலம்- தமிழ் மருத்துவம் – தொ.மு – தொ.பி.
"http://ta.wikipedia.org/w/index.php?title=இராவணன்&oldid=1764466" இருந்து மீள்விக்கப்பட்டது