மாயர் எண் முறைமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாயன் எண் முறைமை கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் மாயன் நாகரிகத்தில் பயன்படுத்தப் பட்டு வந்த 20ஐ அடியாகக் கொண்ட எண் முறை ஆகும்.
இதன் எண்கள் மொத்தம் மூன்று குறியீடுகளை மட்டுமே கொண்டவை. அவை சுழி, ஒன்று (ஒரு புள்ளி), ஐந்து (ஒரு கோடு) ஆகியன ஆகும்.
எடுத்துக் காட்டாக, 19 என்ற எண் நான்கு புள்ளிகளையும் மூன்று கோடுகளை கிடைமட்டமாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியும் காட்டப் படுகிறது.