மானசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானசாரம் என்பது, ஒரு சிற்பநூல் ஆகும். பண்டைக்கால இந்தியாவின் நகர அமைப்பு, கட்டிடக்கலை, படிமவியல் ஆகியவை பற்றிய விடயங்கள் இந்நூலில் எடுத்தாளப்படுகின்றன. மேற்படி துறைகள் தொடர்பாகப் பல நூல்கள் இருந்த போதும், முழுமையான நூல்கள் என்று சொல்லத் தக்கவை மிகச் சிலவே. இம் மிகச்சில முழுமையான நூல்களுள் மானசாரமும் ஒன்றாகும். சிற்பநூல்களுள் மிகவும் நீளமானது என்று சொல்லத்தக்க வகையில் 5400 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல், 70 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆயினும், பெரும்பாலும் தென்னிந்திய மரபுகள் பற்றியே பேசுவதால், இது தென்னிந்தியாவிலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது[1].

காலம்[தொகு]

இதன் காலம் பற்றித் தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. மானசாரத்தை மொழிபெயர்த்துப் பதிப்பித்தவரான பி.கே. ஆச்சார்யா என்பவர் இது குப்தர் காலத்தைச் (கி.பி 4 – 8 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் கருதுகிறார். ஆனால், இது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாதல் வேண்டும் என்று வேறு சிலர் கருதுகிறார்கள்[2].

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. புரூனோ டாகென்ஸ், 1994. p: xliv
  2. புரூனோ டாகென்ஸ், 1994.

உசாத்துணைகள்[தொகு]

  • மயமதம், புரூனோ டாகென்ஸ் (பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர்), கலைகளுக்கான இந்திராகாந்தி தேசிய மையம், புது டில்லி, 1994, மறுபதிப்பு 2000. (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசாரம்&oldid=1734230" இலிருந்து மீள்விக்கப்பட்டது