மாந்த பாலுணர்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்த பாலுணர்வியல் என்பது சிற்றின்ப அனுபவங்கள் மற்றும் தூண்டுதல்களின் வெளிப்பாடாகும்.[1] தனி மனித பாலுணர்வுத்திறன், அகப் பாலுணர்வுத் தூண்டலாகவும், அதன் மூலம் மற்றொரு நபரின் பாலினப் புறத்தூண்டல், ஈர்ப்பிசைவுகளைப் பொருத்தாதாகும். பாலுணர்வானது, உயிரியல் இனவிருத்தி, அல்லது உளவியல் காரணிகளான அன்பு, காதல், காமம், உள்ளிட்ட அக/புற உணர்ச்சித் தூண்டல்கள் அல்லது கற்பின் நோக்கங்களாகவும் இருக்க இயலும்.[2]

மனிதனின் தனிப்பட்ட பருவமடைதலின் (விடலை) போது பாலுணர்வு நடவடிக்கைகள் பொதுவாக அதிகரிக்கிறது.[3] சில அறிஞர்கள் பாலுணர்வு மரபியல் சார்ந்ததென்றும்,[4] சிலர் இவை உயிரியல் மற்றும் சூழல் சார்ந்ததென்றும் வரையறுக்கின்றனர்.[2] இனவிருத்திக் காரணிகள், இனங்களின் அகச்சுரப்பு இயக்கு நீரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனித பாலுணர்வுகள் உள்ளார்ந்த அன்பு, காதல், நம்பிக்கை, உறவு, உளவியல் ரீதியில் அகக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதேபோல் ஒரு தனிநபர், ஒரு இனம் அல்லது குழுவின் பாலியல் மரபு, அனுபவ, ஆன்மிக, பண்பாட்டுக் காரணிகளாலும் கட்டுபடுத்தப்படுகின்றன. மேலும் சட்டம், தத்துவம், அறநெறி, ஒழுக்கவியல், இறையியல், ஆகியவையும் பாலுணர்வைக் கட்டுப்படுத்தும் புறக்காரணிகளாகும்.

பாலுணர்வின் முதன்மை நோக்கம் உயிர் இனவிருத்தியாகும். இடம், காலம், வயதிற்கு ஏற்ப அதன் தூண்டல்களின் விளைவுகள் தனி மனித ஒழுக்கத்தால் பேணிக்காக்கப் பட வேண்டிய ஒன்றாகும். பாலுணர்வு முறையான பாலியல் கல்வி மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும்.

இலக்கிய பாலுணர்வுக் குறிப்புகள்[தொகு]

திருக்குறள்[தொகு]

காமத்துப்பால் என்ற அதிகாரம் முழுமையும் மாந்தப் பாலுணர்வின் அம்சங்களை காதல், களவியல், கற்பு, அக ஒழுக்கம் எனப் பல்வேறு அங்கங்களில் பகுத்தறிய உதவுகிறது.

அகநானூறு[தொகு]

அகநானூறு, தனி மனித அகவாழ்வு, கற்பு, இல்லற ஒழுக்கத்தைப் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு ஆகும். இதில் பாலுணர்வு மற்றும் சமூகம் சார்ந்த முறைமைகள் வகுக்கப்பட்டுள்ளன.[5]

அறிஞர்களின் பார்வையில் பாலுணர்வு[தொகு]

பாலுணர்வு புதிரா? புனிதமா? எனப் பல விவாதங்கள் இருந்த போதும், சில மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுக்கள் பாலுணர்வின் நன்மை, தீமைகளின் கண்ணோட்டங்களாக பின்வருவன:

தாமஸ் அக்வினாஸ் - இயற்கை விதி[தொகு]

இடைக்காலத் தத்துவ மேதை புனித தாமஸ் அக்வினாஸின் கூற்றுப்படி "கடவுள் உருவாக்கிய பாலுணர்வு என்ற தன்மை, நம்மைச் சார்ந்த இயற்கையின் பாதுகாப்பினைக்[6] கருத்தில் கொண்டே கடவுளால் நிலையாக்கப்பட்டது. ஒரு சந்ததியின் பிறப்பின்படி குறிப்பிட்ட அச்சந்ததியின் இயல்பு மரபுவழி பாதுகாக்கப்படுகிறது என்பது இயற்கை. இதற்காக மட்டுமே பாலுணர்வு பயன்படுத்தப்பட வேண்டும். [7]

சிக்மண்ட் பிராய்ட்[தொகு]

மனோதத்துவ அறிஞர் ப்ராய்ட், "பாலுணர்வு நடத்தை என்பது உயிரியல் சார்ந்த, உள்ளத்துள் ஊக்குவிக்கும் முக்கிய சக்தியாகும்" என முன்மொழிந்தார். இவர்தம் கூற்றின்படி பாலுணர்வு இரண்டு பரந்த குழுக்களாக்கப்பட்டது. அவை ஈரோஸ் (பிறப்பு)- இது அனைத்து சுய பாதுகாத்தல், வாழ்வூக்கங்கள் மற்றும் சிற்றின்ப உணர்வுகளை உள்ளடக்கியது. தனடோஸ் (மரண உள்ளுணர்வு) என்பது ஆக்கிரமிப்பு , சுய அழிவு, கொடு உணர்வு ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். பிராய்டின் கூற்றின்படி பாலுணர்வு என்பது உடலின் சிற்றின்பங்களைச் சார்ந்ததாகும்.

ஜான் லாக்[தொகு]

ஜான் லாக்(1632 – 1704) கூற்றுப்படி "மனித இனத்தில் உள்ளார்ந்த வேறுபாடுகளுள்ளதென்பதை மறுக்கிறார். மேலும் மனிதன் சமூகமும், சூழலுமே மனிதனை நெறிப்படுத்துவதாக" வாதிடுகிறார்.[8] சூழலே மனித அறிவை வலுப்படுத்துவதாகவும், சூழியத்திலிருந்து அறிவு அனுபவங்களால் உருப்பெறுவதாகவும் விளக்குகிறார்.[9] மாந்தப்பாலுணர்வு ஏனைய விலங்குகளினின்றும் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் மாந்தப்பாலுணர்வு இனவிருத்தியை மட்டும் சார்ந்ததல்ல.[10] சமூகம், பண்பாடு, நடத்தை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைச் சார்ந்தது.[10]

உயிரியல் மற்றும் உடலியக்க அம்சங்கள்[தொகு]

இனவிருத்தி என்பது ஒரு உயிர் தனது மொத்த இனத்தின் அடையாளமாக, மரபு வழி தன் இனத்தைப் பெருக்குதல் என்பதாகும். உயிரியலில் உடல் சார்ந்த இனப் பெருக்கம் மற்ற (பாலிலா இனப்பெருக்கம், உடலப்பெருக்கம்) முறைகளை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

உடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்[தொகு]

மூளை[தொகு]

பாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும் உளவியல் தோற்றக் காரணியாக நம்பப்படுகிறது. மூளையின் வெளி அடுக்கு (பெருமூளை புறணி (அ)செரிப்ரல் கார்டெக்ஸ்) சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தூண்டுதல் மூலம் பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைத் தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. புறணியின் கீழ் அமிக்டலா ஹிப்போகேம்பஸ், சிங்குலேட் மேன்மடிப்பு, இடைச்சுவர் மற்றும் லிம்பிக் அமைப்புகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் தொடங்குமிடமாகவும், பாலியல் நடத்தை சீரக்குமிடமாகவும் நம்பப்படுகின்றன.

ஹைப்போதலாமஸ் பாலியல் செயல்பாட்டில் மூளை மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த லிம்பிக் அமைப்புகளை இணைக்கும் நரம்புத்தொகுதி ஆகும். இது பல குழுக்கள் அடங்கிய மூளையின் அடிப்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். ஹைப்போதலாமஸ் முக்கியக்கூறுகளில் ஒன்று வலது கீழ்ப்புறத்திலுள்ள உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போதலாமஸ் மற்றும் சுய உற்பத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. சுரக்கும் நான்கு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன்(FSH), ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் ஆகும். ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உடலுறவின் உச்ச நிலையின் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவராலும் வெளியிடப்படுகிறது. இரு ஆக்சிடோசின்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. புரோலாக்டிக் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய இரண்டும் பெண்களின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது. மேலும், ஒரு முதிர்ந்த முட்டை வெளியீட்டில் இது அண்டவிடுப்பினைத் தூண்டுகிறது.

பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை[தொகு]

பெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன.

புற பெண் உடற்கூறியல்[தொகு]
உள் பெண் உடற்கூறியல்[தொகு]

ஆண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை[தொகு]

ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்/வெளி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெண் மாதவிடாய் சுழற்சி போலல்லாமல், ஆண் இனப்பெருக்கச் சுழற்சியில் அவர்களின் விந்துசுரப்பி தொடர்ந்து தினமும் மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது.

புற ஆண் உடற்கூறியல்[தொகு]
உள் ஆண் உடற்கூறியல்[தொகு]

பாலியல் பிறழ்ச்சி மற்றும் பாலியல் பிரச்சனைகள்[தொகு]

  • ஆண்மைக்குறைவு
  • விரைப்புத்திறன்
  • விந்தணுக்கள் குறைவு
  • விருப்பமின்மை
  • பாலியல் விழிப்புணர்வின்மை
  • பாலியல் வழிக் கோளாறுகள்
  • பாலியல் அடிமையாதல்
  • பாலுறவு வலி
  • நீண்ட விறைப்புத்தன்மை
  • பிறப்புறுப்பு வலி

பொதுவான பாலியல் கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள்[தொகு]

  • பாலியல் கல்வி

சரியான வழிகாட்டுதல் மூலம் பாலியல் பற்றியும், அதன் சந்தேகங்கள் பற்றியும் அறிந்து தெளிதல்.

  • சுயக் கட்டுப்பாடு

பிறப்பு கட்டுப்பாடு[தொகு]

மக்கள்தொகை கட்டுப்படுத்தல் மற்றும் தேவையற்ற கருத்தரித்தலைத் தடை செய்தல்.

பாலியல் ஈர்ப்பு[தொகு]

பாலியல் ஈர்ப்பு ஒரு முக்கியமான பாலுணர்வு அம்சம் ஆகும். இது ஒரு நபர் பாலியல் காரணியாக மற்றொரு நபரை ஈர்க்கும் பொருட்டு உடல், உடல் மொழி, அமைப்பு, வனப்பு, செய்கைகள், பண்பு ஆகியனவற்றில் செய்யும் விருப்ப மாற்றங்களைக் குறிக்கும். நபருக்கு நபர் ஈர்ப்புக் காரணிகள் மாறுபடும். ஒரு நபரின் பாலுணர்வு தூண்டலுக்கு ஈர்ப்புக் காரணிகளின் பங்கு இன்றியமையாத ஒன்று. உடல், மரபணு, உளவியல், வாசனை மற்றும் கலாச்சார காரணிகள் இம்மாறுபாட்டை ஏற்படுத்துகின்றன.

உறவு உருவாக்குதல்[தொகு]

பாலுணர்வை நேரடியாக சார்ந்தோ அல்லது மறைமுகமாகச் சார்ந்தோ பாலுறவுமுறை உருவாக்கல் வகைப்படுத்தப்படுகின்றன.

  • பொருத்தம் பார்த்தல்
  • இன்ப உலா
  • காதல்
  • இணையம்
  • திருமணம்
  • மணமற்று ஒன்றிவாழ்தல்
  • ஏனைய பாலியல் உறவுமுறைகள்

சட்ட பிரச்சினைகள்[தொகு]

  • இயற்கைக்கு மாறான உடலுறவு[11]
    • சட்டம்  : 1860ல் கொண்டுவரப்பட்டது, ஆண், பெண், விலங்குகளுடன் இயற்கைக்கு மாறான பாலுறவைத் தடை செய்யும் சட்டப் பிரிவு
    • தண்டனை  : குற்றம் நிரூபிக்கப் பட்டால் ஆயுள் தண்டனையோ அல்லது பத்தாண்டுகால சிறைத் தண்டனையொ விதிக்கப் படலாம்
    • எதிர்ப்பவர்கள் :தற்பால் இனச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.
  • பாலுணர்வுக் கட்டுப்பாடு என்பது பல சட்டங்கள், தடைகள் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இவைகள் ஏதோ ஒரு வகையில் பாலியல் நடவடிக்கைகள் பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சட்டங்கள் நாட்டுக்கு நாடு, பண்பாடு, சமூகம், மதம் மற்றும் காலத்திற்கேற்ப வேறுபடுகின்றன.
  • ஆனாலும் மறைமுகமாகவும், சட்டத்தை பொருட்படுத்தாதும், சிலர் தவறாக நடக்கின்றனர். பொது பாலியல் செயல்பாடு என்பது திருமணத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இருந்தபோதிலும் திருமணமல்லாத உறவும் வழக்கமாகவே உள்ளன. இவை பல சர்ச்சைக்குரிய பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "human sexuality". Definition-of.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. 2.0 2.1 "Sexual orientation, homosexuality and bisexuality". American Psychological Association. Archived from the original on ஆகஸ்ட் 8, 2013. பார்க்கப்பட்ட நாள் August 10, 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. Carlson, Neil R. and C. Donald Heth. "Psychology: the Science of Behaviour." 4th Edition. Toronto: Pearson Canada Inc., 2007. 684.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-04-20.
  5. "வாழ்வியல் அறன்கள்". பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "இயற்கை விதி - தாமஸ் அக்வினாஸ்". பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "இயற்கை விதி". பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஜான் லாக்". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "nature versus vs. nurture debate or controversy - human psychology blank slate". Age-of-the-sage.org. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
  10. 10.0 10.1 "Human Sexuality". Csun.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
  11. "இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு". Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்த_பாலுணர்வியல்&oldid=3824331" இலிருந்து மீள்விக்கப்பட்டது