இலங்கையில் 1848ம் ஆண்டு கலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாத்தளை கிளர்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாத்தளையில் வீரபுரன் அப்புவுக்கு நினைவுச் சின்னம்
1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தள்ளை கலகம் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது.
பொருளடக்கம் |
1848 கலகத்துக்கான காரணிகள் [தொகு]
- கோல்புறூக் விதந்துரைப்புக்களால் உள்நாட்டு மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டமை.
- இராஜகாரிய முறை ஒழிப்பால் விவசாயம் புறக்கணிக்கப்பட்டமை.
- 1846 முடிக்குரிய காணிச்சட்டத்தினால் (பெருந்தோட்டங்களுக்கு சார்பாக அமைந்த அதே நேரம்) உள்நாட்டு மக்கள் தமது நிலத்தினை இழந்தமை.
- உள்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட புதியவரிகள்: (உதாரணமாக: நாய்வரி, பாதைவரி, கடைவரி, படகுவரி, மனிதவரி போன்றன) இந்த வரிகள் மக்களுக்கு சுமையாக இருந்தமை.
- தாழ்நில சிங்களவர் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தமை
- பௌத்தமதம் புறக்கணிக்கப்பட்டமை (உதாரணமாக: தளதா மாளிகைக்கு வழங்கப்பட்ட நன்கொடை நிறுத்தப்பட்டது)
கலகத்தின் போக்கு [தொகு]
- இது மாத்தளை, தம்புள்ளையில் பரந்த அளவிலும், கொழும்பில் சிறிய அளவிலும் நடைபெற்றது
தலைமை [தொகு]
கலகத்துக்கு கொங்கல கொடபண்டா, வீரபுரன் அப்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.
அடக்கப்பட்ட முறை [தொகு]
- பிரித்தானிய தேசாதிபதி டொரிங்டன் அக்கலகத்தை அரசாங்கத்துக்கு எதிரான கலகம் எனக் கருதியமையால் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்.
- தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கலகம் அடக்கப்பட்டது.
உசாத்துணை [தொகு]
- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998