மாதீர்த்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'சிறுகான் யாறு'

மாதீர்த்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குந்தொகை 113.

இவர் பாடல்செய்தியால் பெயர் பெற்ற புலவர். இவர் தம் பாடலில் ”சிறுகான்யாற்று நீரில்” படியும் வண்டலை மகளிர் தன் கூந்தலைக் கழுவி மணமூட்டக் கொண்டுவருவதைக் குறிப்பிடுகின்றார். இதனால் குறுந்தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர் இவருக்கு 'மாதீர்த்தன்' என்று பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

தலைவியை அடையப் பகலில் இன்ன இடத்துக்கு வரலாம் என்று தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள் தோழி.

ஊர்க்குப் பக்கத்தில் பொய்கை. சிறுகான்யாறு அந்தப் பொய்கைக்குத் தொலைவில் இல்லை. அந்த ஆற்றுக்குப் பக்கத்தில் அடர்ந்த பொழிலும் உள்ளது. என் கூந்தலுக்கு எருமணம் ஊட்ட நான் அங்குச் செல்வேன். உன் காதலியும் என்னுடன் வருவாள். (அங்கு வந்தால் நீ உன்னவளைப் பெறலாம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதீர்த்தன்&oldid=912610" இலிருந்து மீள்விக்கப்பட்டது