மாதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாதவி (சிலப்பதிகாரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாதவி, தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நாட்டியம் ஆடிவந்தார்.

கதை[தொகு]

கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. அவளிடம் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் கூடி வாழ்ந்து வந்தான். கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற மகள் பிறந்தாள். சிறிது காலத்தில் கோவலனின் செல்வம் அனைத்தும் கரைந்து போனபின், மனம்திருந்திய அவன் மீண்டும் கண்ணகியிடம் சென்றான்.

கோவலன் மற்றும் கண்ணகியின் மறைவிற்குப் பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவி&oldid=3299323" இலிருந்து மீள்விக்கப்பட்டது