மாக்கேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாக்கேடா (Makeda) அல்லது சேபாவின் அரசி(ஹீப்ரு:מלכת שבא, அரபு மொழி:ملكة سبأ) பழங்கால இராச்சியமான சேபாவினை ஆட்சிசெய்த அரசியாவார். வரலாற்றில், ஹீப்ரூ பைபிள்,புதிய ஏற்பாடு மற்றும் குரானில் இவர் அபேசா என்று அறியப்படுகிறார். இவரைப் பற்றிய சான்றுகளை இந்த நான்கு உரைகளைத் தவிர வேறெங்கும் கிடைக்கப்பெறவில்லை.[1] இவர் ஆட்சி புரிந்த அரசியாக கருதப்பட்டாலும் இதற்கான வரலாற்றுச் சான்று எங்கும் இல்லை. அரசரின் துணைவியாகவும் இருந்திருக்கலாம்.[1] இவரது இராச்சியம் தற்கால ஏமன் அல்லது எத்தியோப்பியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது..[2]

பொருளடக்கம்

[தொகு] விவிலியத்தில்

சாலமனின் செல்வச்செழிப்பையும் புகழையும் அறிவுகூர்மையையும் அறிந்து செபாவின் அரசி பெரும் கூட்டமாக தன்னிடம் உள்ள நறுமண சமையல் பொருட்கள், தங்கம், விலையுயர் கற்கள் இவற்றுடன் அவனிடம் வந்து தனது மனதைத் திறந்து பேசுகிறாள்:(1 Kings 10:2).

அவள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாலமன் பதிலளிக்கிறான்; அவளது விடுகதைகளையும் புதிர்களையும் சரியான அறிவோடு சுவையாக மறுமொழிகிறான்; கனிவாக பழகுகிறான். அவனது போக்கால் கவரப்பட்டு சேபாவின் அரசி தான் கொண்டுவந்த உயர்ந்த சமையல் சேர்க்கைகள், தங்கம் மற்றும் வைடூரியக்கற்களை அவனுக்குப் பரிசாக அளிக்கிறாள்.(1 Kings 10:10)அதற்கு தகுந்தமுறையில் எதிர்பரிசுகளை சாலமன் தருகிறான் (1 Kings 10:13).[3]

[தொகு] எத்தியோப்பிய வடிவம்

An Ethiopian fresco of the Queen of Sheba travelling to Solomon.

எத்தியோப்பியாவின் அரசவம்சம் சாலமன் அரசருக்கும் செபா அரசிக்கும் பிறந்த மகனிடமிருந்து துவங்குவதாக கூறுகிறது.[4] செபாவின் அரசி மாக்கேடா (Makeda) என்று எத்தியோப்பியாவில் அழைக்கப்படுகிறார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 K.A. Kitchen, "On the Reliability of the Old Testament", (Cambridge, U.K.: Wm. B. Eerdmans Publishing, 2003) p. 117.
  2. "Canadians uncover 'Queen of Sheba' temple". CBC News. November 10, 2000. http://www.cbc.ca/health/story/2000/09/12/sheba000912.html. 
  3. Maranatha NIV worship Bible, 1 Kings chapter 10 p. 438
  4. வார்ப்புரு:Wwbible

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாக்கேடா&oldid=1108888" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்