மறுமலர்ச்சி (சிற்றிதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறுமலர்ச்சி இந்தியா தமிழ்நாடு திருச்சியிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.
ஆசிரியர் [தொகு]
- நாவலர் அ. மு. யூசுப் சாகிப்.
பணிக்கூற்று [தொகு]
"சிறுபான்மை மக்களின் வாரக் குரல்"
உள்ளடக்கம் [தொகு]
மறுமலர்ச்சி பல தரமான ஆக்கங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கதைகள், தொடர்கதைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இவ்விதழில் இடம்பெற்றுவந்தன. இவ்விதழில் வந்த ஆக்கங்களை ஆய்வுக்குட்படுத்தி ஒரு மாணவன் எம்.பில் பட்டம் பெற்றுள்ளமையும் அவதானிக்கத்தக்கது.