மறவர் (இனக் குழுமம்)
தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் ஒரு சாதியினர் மறவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று.
பொருளடக்கம் |
[தொகு] மக்கள்தொகை
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.[1]
[தொகு] மரபு
மறவர் இனம் மிக தொன்மை வாய்ந்ததாகும். பண்டைய தமிழகத்தினை ஆண்ட மூவேந்தர்களின் வழி வந்தவர்கள் என்ற சான்றுகளும் உண்டு.[ஆதாரம் தேவை] செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர்.[ஆதாரம் தேவை] எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.[ஆதாரம் தேவை]
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
[தொகு] பெயர்க்காரணம்
முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். [ஆதாரம் தேவை]இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது.[ஆதாரம் தேவை] செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவ்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த புலித்தேவன் இந்த இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.
[தொகு] ஆதாரம்
- ↑ அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009விகடன்*தமிழ்கூடல் டட்ஸ் தமிழ் நக்கீரன்