மருட்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருட்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. இது என்ன பாடல் என்று மருள வைப்பது மருட்பா. [1] வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது மருட்பா எனப்படும். மருட்பா வகைகள்

  1. சமநிலை மருட்பா - வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமநிலையில் கலந்திருப்பது
  2. வியனிலை மருட்பா - வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பது.
சமனிலை மருட்பா எடுத்துக்காட்டு

திருநுதல் வேர்அரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலனும் சேவடி எய்தும் - அரிபரந்த
போகுஇதழ் உண்கண் இமைக்கும்
ஆகும் மற்றிவள் அகலிடத்து அணங்கே[2]

வியனிலை மருட்பா எடுத்துக்காட்டு

பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே

விளக்கம்[தொகு]

கங்கை யமுனை ஆறுகள் சேர்வது போலவும் சங்கர யாராயணர் சட்டகக் கல்வி போலவும் வெண்பாவும் ஆசிரியப்பாவும் விராவி நிற்பது மருட்பா [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. மருட்பா ஏனை இரு சார் அல்லது \ தான் இது என்னும் தனிநிலை இன்றே. (தொல்காப்பியம் - செய்யுளியல் 81)
  2. புறப்பொருள் வெண்பாமாலை - கைக்கிளை - 3
  3. யாப்பருங்கல விருத்தி, பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 171
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருட்பா&oldid=3451315" இலிருந்து மீள்விக்கப்பட்டது