மரபுவழித் தாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சமூகம் மரபுவழியாக, வரலாற்று, புவியியல், பண்பாட்டு, அரசியல் நோக்குகளில் நீண்ட காலமாக தொடர்பும் உறவும் பேணிய நிலப்பகுதி அந்த சமூகத்தின் மரபுவழித் தாயகம் எனப்படுகிறது. உலகில் மக்கள் குழுக்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்மாறிச் சென்று வாழ்வது இயல்பு எனினும், அவர்களின் அடிப்படை அடையாளமும் பண்பாடும் நீண்ட காலமாக வேரூன்றி வளர்ந்த பகுதிகள் மட்டுமே தாயம் எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூத மக்கள் இன்று உலகமெங்கும் பரவி வாழ்ந்தாலும், அவர்களது தாயகமாக இஸ்ரேல் ஆகும். தமிழர்களின் மரபுவழித் தாயகம் தமிழ்நாடும் தமிழீழமும் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுவழித்_தாயகம்&oldid=2718548" இலிருந்து மீள்விக்கப்பட்டது