மனித சடைப்புத்துத் தீ நுண்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Human papillomavirus
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B97.7
ஐ.சி.டி.-9078.1 079.4
நோய்களின் தரவுத்தளம்6032
ஈமெடிசின்med/1037
ம.பா.தD030361

மனித சடைப்புத்துத் தீ நுண்மம் (HPV - human papillomavirus) என்பது மனிதரில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் ஆற்றலுள்ள சடைப்புத்து வகை பபில்லோமா குடும்பத்தை சேர்ந்த (papilloma family) தீ நுண்மங்கள் ஆகும். இவை பரவலாகக் காணப்படும் ஒரு தொற்றுயிரி வகை ஆகும்.

இவை தோலில் அல்லது சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் மேற்பரப்பில் இருக்கும் புறவணியிழையத்தில் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இவற்றில் 200 உக்கும் மேற்பட்ட தீ நுண்மங்கள் உள்ளன. அவற்றில் அநேகமானவை எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. சில பருக்கள் அல்லது பாலுண்ணிகளை ஏற்படுத்தும். ஏனையவை பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும்[1]. பெண்களில் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், குதப் புற்றுநோய், யோனிப் புற்றுநோய், யோனி இதழ் புற்றுநோய் போன்றவற்றையும், ஆண்களில் குதப் புற்றுநோய், ஆண்குறிப் புற்றுநோயையும் உருவாக்கும் தன்மையுள்ளன. இவற்றில் 30-40 தீ நுண்மங்கள் பாலுறவு மூலமே தொற்றுக்கு உட்படுகின்றன. இத் தீ நுண்மத்தில் இருக்கும் E6, E7 என அழைக்கப்படும் இரு புரதங்களே புற்றுநோய் உருவாக்கத்திற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது[2].

கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணி இதுவாகவே கொள்ளப்படுகின்றது[3][4]. ஆனாலும் தற்போது தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மனித சடைப்புத்துத் தீ நுண்ம தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 70 % மான கருப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் இத் தீநுண்மத்தின் இரண்டு குலவகைகளுக்கு எதிராக மிகவும் திறம்பட செயல் புரிவதாக ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற இடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது[5][6].

மேலும் தலை, கழுத்துப் பகுதியில் (வாய்க் குழி, மூக்குக் குழி, தொண்டை, குரல்வளை, உதடு போன்ற பகுதிகள்) ஏற்படும் புற்றுநோய்க்கும் (Head and Neck cancer) இந்த தீ நுண்மம் ஒரு காரணியாக இருப்பது அறியப்பட்டுள்ளது[7][8]. வாய்த் தொண்டைப் (Oropharynx) பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோய் இத் தீநுண்மத்தின் வகை 16, மற்றும் வகை 18 உடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் அறியப்பட்டுள்ளது[9]. இதயக் குழலிய நோய் உருவாவதற்கான சூழிடரை அதிகரிப்பதிலும் இந்த தீ நுண்மத்திற்குத் தொடர்பிருப்பதாக அண்மையில் வெளிவந்த ஆய்வொன்று கூறுகின்றது[10].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Genital HPV Infection — CDC Fact Sheet". Centers for Disease Control and Prevention (CDC). April 10, 2008. பார்க்கப்பட்ட நாள் 13 November 2009.
  2. Chaturvedi, Anil; Maura L. Gillison (March 4, 2010). "Human Papillomavirus and Head and Neck Cancer". in Andrew F. Olshan. Epidemiology, Pathogenesis, and Prevention of Head and Neck Cancer (1st ). New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4419-1471-2. http://www.springerlink.com/content/q676132t254373n5/. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Walboomers JM, Jacobs MV, Manos MM (1999). "Human papillomavirus is a necessary cause of invasive cervical cancer worldwide". J. Pathol. 189 (1): 12–9. doi:10.1002/(SICI)1096-9896(199909)189:1<12::AID-PATH431>3.0.CO;2-F. பப்மெட்:10451482. https://archive.org/details/sim_journal-of-pathology_1999-09_189_1/page/12. 
  4. Kumar V, Abbas AK, Fausto N, Mitchell RN (2007). Robbins Basic Pathology ((8th ed.) ). Saunders Elsevier. பக். 718–721. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4160-2973-1. 
  5. "FDA Licenses New Vaccine for Prevention of Cervical Cancer". U.S. Food and Drug Administration. 2006-06-08 இம் மூலத்தில் இருந்து 2009-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090512110232/http://www.fda.gov/bbs/topics/NEWS/2006/NEW01385.html. பார்த்த நாள்: 2007-12-02. 
  6. Lowy DR, Schiller JT (2006). "Prophylactic human papillomavirus vaccines". J. Clin. Invest. 116 (5): 1167–73. doi:10.1172/JCI28607. பப்மெட்:16670757. 
  7. "Biomarkers for Cancers of the Head and Neck". Archived from the original on 2017-03-12. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
  8. . பப்மெட்:17494927. 
  9. name="Gillison ML. Human papilloma virus-associated head and neck cancer is a distinct epidemiologic, clinical, and molecular entity. Semin Oncol 2004;31:744-54."
  10. Kuo, HK; Fujise, K (2011-11-01). "Human papillomavirus and cardiovascular disease among u.s. Women in the national health and nutrition examination survey, 2003 to 2006.". Journal of the American College of Cardiology 58 (19): 2001–6. doi:10.1016/j.jacc.2011.07.038. பப்மெட்:22032713.