மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது.

உலகப் போர் பின்னணி[தொகு]

LOOL MEEM SAAS[தொகு]

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.

மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது.

பொருளடக்கம்[தொகு]

  null மறை 

உலகப் போர் பின்னணி[தொகு]

மனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் உலக போர்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் மீது அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன. குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப் போர்களின் பிற்பட்ட காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமாணத்தில் தனிமனித உரிமைகளின் மீதான மீறுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கண்காணிப்பதற்கான ஓர் அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின.

உலக மகா யுத்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரும் மிகப் பிரபலமான சர்வதேச சட்டவல்லுநர்களில் ஒருவருமான ஹெர்ஷ் லாடெவ்பாச் (Hersh Lautevpacht) என்பவர் சர்வதேச தேசிய சட்டங்கள் யாவும் அதாவது இவற்றின் இறுதி நோக்கமாக அமைவது மனித ஆளுமையையும் அதனுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதே எனக் கருத்துரைத்துள்ளார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவானது சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாவதாக ஐரோப்பாவானது அரசியல் சித்தாந்த ரீதியில் இரு வேறுபட்ட முகங்களாகப் பிரிந்திருந்ததுடன் அதன் காலனித்துவ அதிகார வீழ்ச்சி அரசியல் பொருளாதார ரீதியான விடுதலை கோரிய அரசுகள் பலவற்றின் விடுதலைக்கு வழி கோலியது. இரண்டாவது மாற்றமாக ஐக்கிய நாடுகளையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களினதும் தோற்றமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு என்பவற்றை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்ற மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தலை ஐக்கிய நாடுகளின் பட்டயத்தின் உறுப்புரை ஒன்று உறுதிப் படுத்துவதுடன் அது சர்வதேச ரீதியாக மதிக்கப்படுவதற்கான சட்டக் கடப்பாடுகளை சுமத்தி நிற்கின்றது. மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்தல் எனும் நோக்கில் அமைந்த தொழிற்பாடு ரீதியான அவ்விருப்பமே மனித உரிமைகள் சம்பந்தமாக பிரகடனம் ஒன்றை உருவாக்கின. இதனை உருவாக்குவதற்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஆலோசனை வழங்கின.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்[தொகு]

முதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்குய குறிக்கோளாக உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும், சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீர்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.

அதன் பின்னர் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் குழுவின் தலைவருமான எலியனார் ரூஸ்வெல்ட் (Eleanor Roosvelt) ஆவார்.

இந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை மதிப்பதற்கும் உறுப்பு நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும் உபயோகப் படுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளுக்கு இடையில் நிலவிய கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில் ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று.

சோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு[தொகு]

சோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப் படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளை முன்னையதிற்குப் பதிலாக உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்தியைக் கொடுத்தன. இந்த இணக்கம் செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை உருவாக்கி அவை 1966 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின் அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக்கொண்டபின் ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 ஆம் ஆண்டில். இது தவிர மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறு பல ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன.

அவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள், சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டன.

மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்[தொகு]

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம். இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக் கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில் கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப்பாடற்ற பூரணத்துவமான உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக மனிதன் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் எவை என வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற பகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.

ஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.

அதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது