மனத்தளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனச்சோர்வு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Albrecht Dürer's engraving Melencolia I, ca. 1514

மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது பசியின்மையை உணர்வார்கள். மேலும் அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மைக்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், வலிகள், சமிபாட்டுத் தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்[1].

பொருளடக்கம்

மனச்சோர்வினால் ஏற்படும் நோய்கள் [தொகு]

மனநோய் நோய்க்கூட்டறிகுறி [தொகு]

  • இப்படியான மனச்சோர்வு நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என அழைப்பர்.
  • இந்த மனச்சோர்வு தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.
  • இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.

மனநோயல்லாத நிலை [தொகு]

சில தொற்றுநோய்களாலும், சில மனநிலை தொடர்பான பிரச்சனைகளாலும் இப்படியான மனச்சோர்வு ஏற்படலாம். தைராய்டு சுரப்புக் குறை நோயின் ஆரம்ப அறிகுறியாக இவ்வாறான மனச்சோர்வு காணப்படும். இரு வேறுபட்ட வைரசினால் ஏற்படக்கூடிய Mononucleosis என்னும் நோயும், இவ்வகையான மனசோர்வை ஏற்படுத்தும்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

மனித மூளை

உடல் உறுப்புக்கள்

அடிக்குறிப்புகள் [தொகு]

  1. "Depression". National Institute of Mental Health (2009-09-23). பார்த்த நாள் 2010-05-22.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மனத்தளர்ச்சி&oldid=1357041" இருந்து மீள்விக்கப்பட்டது