மது கோடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மது கோடா | |
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு மே 2009 |
|
| தொகுதி | சாய்பாசா |
|---|---|
|
முன்னாள் சார்க்கண்ட் முதல்வர்
|
|
| பதவியில் செப்டம்பர் 2006 - ஆகத்து 2008 |
|
| முன்னவர் | அருச்சுன் முண்டா |
| பின்வந்தவர் | சிபு சொரென் |
| அரசியல் கட்சி | சுயேச்சை |
|
|
|
| பிறப்பு | சனவரி 1971 (அகவை 41) சார்க்கண்ட் |
| இருப்பிடம் | சார்க்கண்ட் |
மது கோடா (Madhu Koda, பிறப்பு சனவரி 6, 1971) 2006 முதல் 2008 வரை சார்க்கண்ட் மாநில முதல்வராக பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். செப்டம்பர் 18, 2006 இல் சார்க்கண்டின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற மது கோடா ஆகத்து 23, 2008இல் தாம் அப்பதவியிலிருந்து விலகும் வரை பணியாற்றினார். சிபு சொரென் இவரை அடுத்த முதல்வராக பொறுப்பேற்றார். ஓர் இந்திய மாநிலத்தின் முதல்வராக சுயேச்சை ஒருவர் இவ்வாறு பொறுப்பேற்பது மூன்றாவது முறையாக அமைந்தது. இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டில் ஒரிசாவில் பிசுவநாத் தாசும் 2002இல் மேகாலயாவில் எஸ். எஃப். கோங்கலமும் இவ்வாறு சுயேச்சைகளாக இருந்து முதலமைச்சர் பொறுப்பாற்றியவர்கள்.
தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிணை விண்ணப்பங்கள் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளார். [1].