மதுரா விஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுரா விஜயம் 14ம் நூற்றாண்டில் கங்கதேவியால் எழுதப்பட்ட ஒரு சமற்கிருதக் கவிதை நூல். வீர கம்பராய சரித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கங்கதேவியின் கணவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து மதுரை சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை இந்நூல் விவரிக்கிறது.[1][2][3][4]

கண்டுபிடிப்பும் வெளியீடும்[தொகு]

1900களின் ஆரம்பத்தில் இந்நூல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. பண்டிதர் என். ராம்சாமி சாஸ்திரியார் என்பார் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பாரம்பரிய நூலகத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த போது இதனைக் கண்டெடுத்தார். வெறு இரு நூல்களின் ஓலைச்சுவடிகளிடையே மதுரா விஜயம் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 61 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கபப்ட்டன. ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை - சில பாடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. 1924 இல் ஜி. ஹரிஹர சாஸ்திரி மற்றும் வி. சீனிவாச சாஸ்திரி ஆகியோரால் இந்நூல் திருவனந்தபுரத்தில் முதன் முதலில் அச்சிடப்பட்டது.[5]

உள்ளடக்கம்[தொகு]

மதுரா விஜயத்தில் ஒன்பது பகுதிகள் உள்ளன. முதல் பகுதிகளில் கங்க தேவி விஜயநகரப் பேரரசின் பின்புலம், முதலாவது புக்கா ராயரின் ஆட்சி சிறப்புகள், அவரது மகன் கம்பண்ணரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து விவரிக்கிறார். நூலின் நடுப்பகுதிகள், கம்பண்ணர் தெற்கு நோக்கி படையெடுத்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றுவதை விவரிக்கின்றன. சம்புவரையர்களை வென்று காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய பின்னர் கம்பண்ணர் படையெடுப்பை சற்றே நிறுத்தி ஓய்வு கொள்கிறார். அப்போது மதுரை மீனாட்சியம்மன் ஒரு பெண் வடிவில் கம்பண்ணர் முன் தோன்றி தென் தமிழ் நாட்டை மதுரை சுல்தான்களின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறார். அதற்கிணங்கி மீண்டும் தெற்கு நோக்கிப் படையெடுக்கிறார் கம்பண்ணர். நூலின் இறுதிப்பகுதிகளில் மதுரை மீதான படையெடுப்பு, கம்பண்ணர் அடைந்த வெற்றிகள், கடைசி சுல்தான் சிக்கந்தர் ஷாவினை அவர் தனித்துப் போரிட்டு வெல்லுதல், திருவரங்கம் கோவிலை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்துதல் போன்ற செய்திகள் சொல்லப்படுகின்றன.[2][5]

வரலாற்று ஆதாரம்[தொகு]

மதுரா விஜயமும், இப்னு பதூதாவின் பயணக் குறிப்புகளும் வரலாற்றாளர்களால் மதுரை சுல்தானகத்தின் வரலாற்றினை அறிய பயன்படுத்தப்பட்டுள்ளன.[6][7]


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_விஜயம்&oldid=1375126" இருந்து மீள்விக்கப்பட்டது