மணி கவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணி கவுல் (Mani Kaul, டிசம்பர் 25, 1944ஜூலை 6, 2011) இந்தியத் திரைப்படத்துறையில் கலைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர்.

வாழ்க்கை[தொகு]

மணி கவுலின் இயற்பெயர் ரவீந்திரநாத் கவுல். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். பூனாவில் உள்ள புகழ்பெற்ற மத்திய திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தின் மாணவர். அங்கே புகழ்மிக்க வங்க இயக்குநரான ரித்விக் கட்டக் ஆசிரியராக பணியாற்றியபோது அவரது மாணவரானார். ரித்விக் கட்டக்கின் சோதனைமுறை திரைமுயற்சிகளில் ஈடுபாடுகொண்டார். 1966ல் பட்டம் பெற்றார். 1969ல் உஸ்கி ரொட்டி படத்தின் மூலம் தனது சினிமா‌ வாழ்க்கையை தொடங்கிய மணி கவுல், அந்த படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார். ஆசாத் கா ஏக் தின், துவிதா, இடியட் போன்ற படங்களை இயக்கியுள்ளார். "சித்தேஸ்வரி" என்று ஆவணப் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். மணி கவுல் புகழ்பெற்ற இந்தி இயக்குநர் மகேஷ் கவுலின் மருமகன். திரைப்பட தொழில்நுட்ப கலைஞர் சங்கத்தை 1976ல் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர்.

விருதுகள்[தொகு]

தேசிய விருதுகள்
  • 1974: சிறந்த இயக்குநர் - துவிதா
  • 1989: சிறந்த ஆவணப்பட இயக்குநர் - சித்தேஸ்வரி
ஃபிலிம்ஃபேர் விருதுகள்
  • 1971: உஸ்கி ரொட்டி
  • 1972: ஆசாத் கா ஏக் தின்
  • 1974: துவிதா
  • 1993: இடியட்

திரைப்படங்கள்[தொகு]

  • உஸ்கி ரொட்டிi (1969)
  • ஆஸாத் கா ஏக் தின் (1971)
  • துவிதா (1973)
  • காசிராம் கொத்வால் (1979)
  • சதா சே உதாடா ஆத்மி (1980)
  • துருபத் (1982)
  • மாட்டி மனஸ் (1984)
  • சித்தேஸ்வரி (1989)
  • நாஸர் (1989)
  • இடியட் (1992)
  • The Cloud Door (1995)
  • நௌகார் கி கமீஸ் (1999)[10]
  • ஃபோஜ் (2000)
  • இக் பென் கீன் அண்டெர் 2002
  • A Monkey's Raincoat (2005)
  • 'Signature Film' for Osian Cinefan Festival of Asian Cinema (2006)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_கவுல்&oldid=2706489" இலிருந்து மீள்விக்கப்பட்டது