மணப்பாறை மாட்டுச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணப்பாறை மாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மணப்பாறை மாட்டுச் சந்தை என்பது இந்தியா, தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் நடக்கும் மாட்டுச் சந்தை ஆகும்.

தமிழக அளவில் மணப்பாறை மாட்டுச்சந்தை புகழ் பெற்றதாகும். மணப்பாறையில் புதன்கிழமைதோறும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தில் உள்ள அனைவரும் வந்து மஞ்சுவிரட்டலுக்கான காளை, மாட்டு வண்டி போட்டிக்கான காளை, உழுவதற்கான மாடுகள் என்ற நிலையில் தெரிவு செய்து வாங்குகின்றனர். [1] இந்த சந்தையில் மாடு விற்பனை தவிர மாட்டுக்கு கொம்பு சீவுவது, லாடம் அடிப்பது, மூக்கணாங்கயிறு மாட்டுவது போன்ற தொழில்களும் நடக்கிறது.

வரலாறு[தொகு]

நூறு ஆண்டுகளுக்கு முன் மணப்பாறையில் ஆங்காங்கே சிறிய அளவில் மாட்டு சந்தை நடைபெற்று வந்தது. பின்னர் இதன் முக்கியத்தும் அதிகரித்தது, மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தற்போது உள்ள திருச்சி-திண்டுக்கல் வெளிவட்ட சாலைக்கு சந்தை இடம் மாறியது. கடந்த 1928ஆம் ஆண்டு 12 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்தை அமைக்கப்பட்டது.[2] புதன் கிழமை சந்தைக்கு செவ்வாய் கிழமையே ஆயிரக்கணக்காக மாடுகள் வந்து சேர்ந்துவிடும். தற்காலத்தில் இங்கு வாரந்தோறும் 2,500 முதல் 3000 மாடுகள் கைமாறுகின்றன. இந்த சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என பக்கத்து மாநிலங்களில் இருந்து மாடுகள் வருகின்றன.

திரைப்படப் பாடலில்[தொகு]

மக்களை பெற்ற மகராசி என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி' (பாடலாசிரியர்-மருதகாசி) என்ற பாடலால் மணப்பாறை மாட்டுச் சந்தையில் வாங்கப்பட மாட்டின் உயர்வு அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 தினமணி புத்தாண்டு மலர் 2014
  2. தீ. பிரன்ன வெங்கடேஷ், தொழில்நுட்பம் வளருது.. மாடு விற்பனை கூடுது! ஆசியாவின் மிகப்பெரிய மாட்டுச் சந்தை, கட்டுரை, தினகரன் பொங்கல் மலர் 2016, பக்கம் 84-92
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்பாறை_மாட்டுச்_சந்தை&oldid=3597782" இலிருந்து மீள்விக்கப்பட்டது