மடிக்கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்புக்-ஒருவகை மடிக்கணினி

மடிக்கணினி அல்லது மடிக்கணி என்பது மடியில் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க அளவிலும் வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்துக்கிடம் கொண்டு செல்லப்படக்கூடிய கணினி ஆகும். இதில் கணித்திரையை மடித்து மூடிவைக்கக்கூடியதக இருப்பதாலும் இதற்கு மடிக்கணி அல்லது மடிக்கணினி என்று பெயர்.

தோற்றம்[தொகு]

முதல் மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 ல் வடிவமைத்தார்.en:History of laptops, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1982 ல் வெளியிடப்பட்டது.en:Grid Compass

மடிக்கணினிகள் தொழில்நுட்ப நோக்கில் செயல்படுத்தும் முன்பாகவே அது பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் ஆலம் கே என்பவர் முன்வைத்த டைனாபுக் என்ற எண்ணக்கரு அத்தகையதொன்றாகும். முதன்முதலில் வணிக நோக்கில் கிடைக்கப்பெற்ற மடிக்கணினி 1981 இல் அறிமுகமான ஒஸ்போர்ன் 1 என்பதாகும். இன்றைய மடிக்கணினிகள் எடையில் பெரும்பாலும் 2.3 கிலோகிராம் முதல் 3.2 கிகி (5 முதல் 7 பவுண்டு வரை இருக்கும். ஆனால் 1.3 கிலோகிராம் அளவு குறைந்த எடை உள்ளனவும் விற்கின்றார்கள். கணித்திரையின் அளவு பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செமீ (14.1 அங்குலம் முதல் 15.4 அங்குலம் வரை) மூலைவிட்ட அளவு கொண்டிருக்கும். ஆனால் இன்னும் சிறிய திரைகள் உள்ளனவும் (30.7 செமீ அல்லது 12.1 அங்குலம் உடையனவும் அதனைவிட சிறியனவும்) உண்டு. பெரும்பாலான கணித்திரைகள் நீர்மவடிவப் படிகத் திரைகளால் ஆனவை. இத்திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளையும் பின்னிருந்து இயக்கிக் கட்டுறுத்தும் மின்சுற்றுகள் மெல்லிய சீருறா சிலிக்கானால் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர்களால் ஆனவை. இவற்றை ஆக்டிவ் மாட்ரிக்ஸ் தின் ஃவில்ம் டிரான்சிஸ்டர் என்று கூறுவார்கள். இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதாகையால், தனியான மின்வாய் (மின்னாற்றல் தரும் ஒரு மின்கலம்) தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருப்பன.

ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி என்னும் அமைப்பு குறைந்த விலையில் (சுமார் நூறு அமெரிக்க டாலர்கள்) உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் ஒரு கணினியை வடிவமைத்து வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மடிக்கணினி&oldid=1345544" இருந்து மீள்விக்கப்பட்டது