மச்சு பிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மச்சு பிச்சு
Historic Sanctuary of Machu Picchu
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Huayna Picchu above the ruins of Machu Picchu
வகைகலப்பு
ஒப்பளவுi, iii, vii, ix
உசாத்துணை274
UNESCO regionஇலத்தீன் அமெரிக்கா, கரிபியன்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1983 (7வது தொடர்)

மச்சு பிச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.[2]

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது[3].

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

மச்சு பிச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.

1912 இல் மச்சு பிக்ச்சுவின் தோற்றம்
சூரியனின் கோயில்

வரலாறு[தொகு]

மச்சி பிச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது[4]. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது[4][5]. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை[5].

பெருவில் மச்சு பிக்ச்சுவின் அமைவிடம்
இன்கா சுவர்
"இண்டிகுவாட்டானா": இன்காக்களினால் கட்டப்பட்ட ஒரு வானியல் மணிக்கூடாகக் கருதப்படுகிறது
மச்சு பிக்ச்சுவின் தோற்றம்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Historic Sanctuary of Machu Picchu — UNESCO World Heritage Centre". யுனெசுகோ. 2006. {{cite web}}: Unknown parameter |accessdaymonth= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. Machu Picchu
  3. Dan Collyns (6 June 2008). "Machu Picchu ruin 'found earlier'". BBC News.;Michael Marshall (7 June 2008). "'Incan lost city looted by German businessman'". NewScientist.
  4. 4.0 4.1 Wright et al 2000b, p.1.
  5. 5.0 5.1 Wright & Valencia Zegarra 2001, 2004, p.1.
  6. Norbert Krupa. August 14, 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சு_பிச்சு&oldid=3410599" இலிருந்து மீள்விக்கப்பட்டது