செவ்வாய் சுற்றுகலன் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மங்கள்யான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம்
Mars Orbiter Mission
Mars Orbiter Mission - India - ArtistsConcept.jpg
இஸ்ரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (ஓவியம்)
திட்ட வகை செவ்வாய் சுற்றுக்கலன்
இயக்குபவர் இசுரோ
இணையதளம் MOM
திட்டக் காலம் 300 நாட்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்பு இ.வி.ஆ.மை.செ.ந
ஏவல் திணிவு 1,350 கிகி (2,980 இறா)[1]
Dry mass 500கிகி (1,100 இறா)
ஏற்புச்சுமை-நிறை 15கிகி (33 இறா)[2]
திறன் சூரிய மின்கலங்கள்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள் 5 நவம்பர் 2013 09:08 ஒசநே[3]
ஏவுகலன் பிஎஸ்எல்வி-15 சி25[1]
ஏவலிடம் சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர் இசுரோ
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference system செவ்வாய் மையம்
அண்மைஏரியன் 377 கிமீ (234 மை)
கவர்ச்சிஏரியன் 80,000 கிமீ (50 மை)
சாய்வு 17.864 பாகை [4]
Epoch திட்டத்தில்
செவ்வாய் சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல் 21 செப்டம்பர் 2014[5]
(திட்டத்தில்)

செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் முனைய துணைக்கோள் ஏவுகலம்(PSLV) மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து நவம்பர் 5, 2013 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.[6] இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணையும்.[7]

திட்டசெலவு[தொகு]

5 ஆய்வுக் கருவிகளுடன் 15 கிலோ எடைகொண்ட இதை தயாரிக்க இந்திய ரூபாயின் மதிப்பில் 450 கோடிகள் செலவு செய்துள்ளார்கள்.இத் திட்டம் வெற்றி பெற்றால் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெறும். [8][9][10]

நோக்கம்[தொகு]

செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள். [6] மேலும் ,[11]

  1. விண்வெளிப் பயணங்களுக்குத் துக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது; விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது; அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது. விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.
  2. செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது; அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது; அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.
  3. செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது. அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.
  4. செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.

துணை கருவிகள்[தொகு]

செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் 15 கிலோ எடையுள்ள 5 துணை கருவிகள் உள்ளடக்கியுள்ளது:[2][12][13]

காற்றுமண்டல ஆய்வுகள்
  • லைமன் ஆல்ஃபா ஒளிமானி (Lyman Alpha Photometer)
  • செவ்வாய்க்கான மீத்தேன் உணரி(Mars Methane Sensor)
மேற்புற படிம ஆய்வுகள்
  • செவ்வாய் வண்ண ஒளிப்படக்கருவி (Mars Color Camera)
  • வெதுப்பு அகச்செங்கதிர் படிமமாக்கல் பட்டைமானி (Thermal Infrared Imaging Spectrometer)
துகள் சுற்றுப்புற ஆய்வுகள்
  • செவ்வாய் புறக்காற்று மண்டல நடுநிலை பொதிவு பகுப்பாய்வி (mars exospheric neutral composition analyser).

செயல்பாடு[தொகு]

1350 கிலோ எடையுள்ள மங்கள்யான், விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களுக்கு பின் செவ்வாயை சென்றடையும். சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப்படும் 5 உபகரணங்களும் இந்தியாவுடையாதாகவே இருக்கும்.[6]மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடை 1,350 கிகி ஆகும். [14]

வேகம்[தொகு]

மங்கள்யான் உயரே சென்றடைந்தபோது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர்.மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு சக்தி உதவியது.பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால், அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால் , நீள் வட்டப் பாதையில் அதை செலுத்தினர் . பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்தபோது, மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது.இவ்விதம் ( பூமி உள்பட) ஒரு கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் என்று பெயர். கடந்த காலங்களில், "பயனீர்', "வாயேஜர்' விண்கலங்களை அனுப்பியபோது, நாசா இந்த உத்தியைப் பயன்படுத்தியது.[15]

புகைப்படம்[தொகு]

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக் கோள், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஹெலன் புயலை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது[16][17]

தடங்கல்[தொகு]

இஸ்ரோ மங்கள்யானின் கண்காணிப்பு மற்றும் சுற்றுப்பாதை தகவல் பெற நாசாவை சார்ந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அரசாங்கத்தின் பணிநிறுத்தம் காரணமாக நாசாவின் பல கண்காணிப்பு நிலையங்கள் ஆளில்லா நிலையங்களாக மாற்றப்பட்டிருந்தன. இப்பணிநிறுத்தம் இஸ்ரோவின் கல ஏவு கால அளவை கடந்து தொடர்ந்தால் மங்கள்யான் கல ஏவு கால அளவிற்காக 2015 அல்லது 2016 வரை காத்திருக்க நேரிடும் சூழ்நிலை இருந்தது .[18] நவம்பர் 5 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-25 மூலமாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ பின்னர் தெரிவித்தது.[19][20]

தற்போதைய நிலவரம்[தொகு]

பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ஏவுகலம் மூலம் மங்கள்யான் செயற்கைகோள், நவம்பர் 5, 2013 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[21][22][23][24] தற்போது இந்த ஏவுகலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த சுற்றுவட்டப் பாதையின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இறுதியாக திசம்பர் 1, 2013 அன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [25] 43 நிமிடங்கள் பயணத்துக்குப் பிறகு பூமி அருகில் குறைந்தது 246 கிலோமீட்டர் தொலைவிலும் அதிகப்படியாக 23,566 கிலோமீட்டர்கள் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது.[26] 11.11.2013 திங்கள்கிழமை அன்று அதிகாலை 2.06 மணிக்கு 3ஆவது சுற்றுப்பாதையை கடந்து 4 ஆவது சுற்றுப்பாதைக்கு மங்கள்யானை முன்னேற்ற முயற்ச்சி மேற்க்கொள்ளப்பட்டது. ஆனால் சில இயந்திரக்கோளாறு காரணமாக தடங்கல் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.[27]

2 லட்சம் கிமீ[தொகு]

16.11.2013 (சனிக்கிழமை) அதிகாலை 1.27 மணி நிலவரப்படி மங்கள்யான் 1.92,874 கிமீ தூரத்தில் 217 கிமீ நீள்வட்டப்பாதையில், விநாடிக்கு 101 கிமீகள் வேகத்தில் மங்கள்யான் சுற்றிவருகிறது.[28] 30.11.2013 (சனிக்கிழமை இரவு) புவியின் நீள்வட்டப் பாதையிலிருந்து 12.49 மணிக்கு விண்கல கட்டுப்பாட்டறையில் அமைந்துள்ள 440 நியூட்டன் திரவ எரிபொருள் என்ஜினை 22 நிமிடங்கள் இயக்கி செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்க உந்தப்பட்டது.[29] மங்கள்யான் 04.12.2013 அன்றுடன் 72 மணி நேர பயணத்தின் மூலம் 9.25 லட்சம் கிமீ தூரத்தைக்கடந்துள்ளது, இன்னும் 300 தினங்களில் சூரியனைக்கடக்கும்.[30]

10 லட்சம் கிமீ[தொகு]

டிசம்பர் 4 2013 அன்று அதிகாலை 1.14 மணிக்கு புவி ஈர்ப்புவிசையை விட்டு வெளியே மங்கள்யான் விண்கலம் கடந்தது.[31][32]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "12 must-know facts about India's mission to Mars". Economic Times. 11 அக்டோபர் 2013. http://economictimes.indiatimes.com/slideshows/science-technology/12-must-know-facts-about-indias-mission-to-mars/will-enter-into-mars-orbit/slideshow/23965837.cms. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2013. 
  2. 2.0 2.1 "Mars Orbiter MIssion - Payloads" (PDF). Indian Space Research Organisation (ISRO). இந்திய விண்வெளி ஆய்வு மையம் (October 2013). பார்த்த நாள் 2013-10-08.
  3. "India to launch Mars Orbiter Mission on November 5". NDTV. 22 அக்டோபர் 2013. http://timesofindia.indiatimes.com/india/India-to-launch-Mars-Orbiter-Mission-on-November-5/articleshow/24548060.cms. பார்த்த நாள்: 19 அக்டோபர் 2013. 
  4. Mars Orbiter Mission (MOM) - Manglayaan (15 October 2013)
  5. http://www.indianexpress.com/news/nasa-findings-won-t-affect-mars-mission-say-isro-officials/1178170/0
  6. 6.0 6.1 6.2 "அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்". பிபிசி (22 செப்டம்பர், 2013). பார்த்த நாள் 12 அக்டோபர் 2013.
  7. http://www.maalaimalar.com/2013/11/06181150/India-Mars-mission-a-great-ach.html
  8. சீனா சாதிக்காததை இந்தியா சாதிக்குமா தினமணி Aug 12, 2013
  9. செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்ப "இஸ்ரோ' திட்டம் தினமணி
  10. India’s Mangalyaan Mission To Head To Mars In November 2013 Asian Scientist Magazine September 12, 2013
  11. "ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி". S. Jayabarathan (நவம்பர் 8, 2013). பார்த்த நாள் நவம்பர் 9, 2013.
  12. Chellappan, Kumar (11January 2013). "Amangal to budget from Mangalyaan, say experts". Daily Pioneer. http://www.dailypioneer.com/home/online-channel/360-todays-newspaper/121404-amangal-to-budget-from-mangalyaan-say-experts.html. பார்த்த நாள்: 11 January 2013. 
  13. "Mars mission gets October, 2013 launch date deadline as India reaches out to the stars". The Indian Express. 4 January 2013. http://www.indianexpress.com/news/mars-mission-gets-october-2013-launch-date-deadline-as-india-reaches-out-to-the-stars/1054576/0. பார்த்த நாள்: 5 January 2013. 
  14. கிரகத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது 'மங்கள்யான்'
  15. என். ராமதுரை (30 நவம்பர் 2013). "மங்கள்யானுக்கு உதவும் பூமியின் ஈர்ப்பு சக்தி". தினமணி. பார்த்த நாள் 4 திசம்பர் 2013.
  16. "ஹெலன் புயலை புகைப்படம் எடுத்த மங்கள்யான்!". விகடன். பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
  17. "ஹெலன் புயலை புகைப்படம் எடுத்தது மங்கள்யான்". தினமணி. பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
  18. "US govt shutdown may force Isro to delay October 28 Mars mission launch by 2 years". Times Of India. 5 அக்டோபர் 2013. http://articles.timesofindia.indiatimes.com/2013-10-05/india/42744721_1_launch-vehicle-pslv-c-sriharikota-isro-mission. பார்த்த நாள்: 12 அக்டோபர் 2013. 
  19. "செவ்வாய் கிரகத்திற்கு இன்று மங்கள்யான் ;இஸ்ரோ சேர்மன் திருப்பதியில் வேண்டினார்". தினமலர். 05 நவம்பர் 2013. http://www.dinamalar.com/news_detail.asp?id=843007. பார்த்த நாள்: 05 நவம்பர் 2013. 
  20. "Isro chief seeks divine help for Mars mission". டைம்ஸ் ஆஃப் இன்டியா. 05 நவம்பர் 2013. http://timesofindia.indiatimes.com/india/Isro-chief-seeks-divine-help-for-Mars-mission/articleshow/25238936.cms. பார்த்த நாள்: 05 நவம்பர் 2013. 
  21. http://www.financialexpress.com/news/indias-mars-mission-begins-as-isro-launches-mangalyaan-successfully/1191116
  22. http://www.dnaindia.com/india/commentary-rs450-crore-indian-mars-orbiter-mission-expedition-seeks-to-find-if-there-is-methane-on-mars-1913946
  23. விண்ணில் பாய்ந்தது மங்கள்யான்! புதிய தலைமுறை
  24. இந்தியாவின் மங்கள்யான் வெற்றிகரமாக ஏவப்பட்டது பி பி சி 5 நவம்பர், 2013 - 09:57 ஜிஎம்டி
  25. புவி வட்டப் பாதையை மங்கல்யான் வெற்றிகரமாக சுற்றி வருகிறது
  26. [1]
  27. கோளாறை சீரமைத்தது இஸ்ரோ: ஃபேஸ்புக்கில் அப்டேட்
  28. [2]
  29. செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக அனுப்பியது இஸ்ரோ
  30. விண்வெளியில் ஒரு மைல்கல் சாதனை
  31. "பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே சென்றது மங்கள்யான்". தினமணி. பார்த்த நாள் 5 திசம்பர் 2013.
  32. "Isro's Mars Orbiter Mission crosses Moon's orbit, travelling 10,00,000 km per day". THE TIMES OF INDIA. பார்த்த நாள் 5 திசம்பர் 2013.

வெளியிணைப்புகள்[தொகு]