மகாமாயா நகர் மாவட்டம்
| மகாமாயா நகர் மாவட்டம் महामायानगर ज़िला مہامایا نگر ضلع |
|
|---|---|
|
மகாமாயா நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | அலிகார் |
| தலைமையகம் | ஹத்ராஸ் |
| பரப்பு | 1,840 கிமீ2 (710 ச மைல்) |
| மக்கட்தொகை | 1,565,678 (2011) |
| மக்கள் அடர்த்தி | 851 /km2 (2 /sq mi) |
| படிப்பறிவு | 73.1 per cent |
| பாலின விகிதம் | 870 |
| மக்களவைத்தொகுதிகள் | ஹத்ராஸ் |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
மகாமாயா நகர் மாவட்டம் (இந்தி: महामायानगर ज़िला, உருது: مہامایا نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று. இது முன்பு ஹத்ராஸ் மாவட்டம் என அழைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹத்ராஸ் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 1800.1 கிமீ². கௌதம புத்தரின் தாயான மகாமாயாவின் பெயரால் இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது.[1]
வரலாறு [தொகு]
மகாமாயா நகர் மாவட்டம் 3 மே, 1997ல் அலிகார் மற்றும் மதுரா மாவட்ட பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மகாமாயா நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,565,678.[2] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 318வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 851 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[2] மேலும் மகாமாயா நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.19%.[2]மகாமாயா நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 870 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மகாமாயா நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.1%.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Bhushan, Ranjit (July 2, 1997). "The Ambedkar Armada". Outlook.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||